நியூஸிலாந்து போல் சென்னையையும் மாற்றுவோம் – அமைச்சர் ஆர்பி உதயகுமார்..!

0
Minister Uthayakumar
Minister Uthayakumar

நியூஸிலாந்து நாட்டைப் போல் சென்னை மாநகரையும் கொரோனா தொற்று இல்லாத பகுதியாக மாற்றுவோம் என அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்து உள்ளார்.

கொரோனா தொற்று:

தமிழகத்தில் சென்னையை மையமாக வைத்து கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. அங்கு தான் உயிரிழப்புகளும் அதிகமாக உள்ளது. இதனால் சென்னையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 5 அமைச்சர்கள் அடங்கிய குழுவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நியமித்தார். அதில் டி ஜெயக்குமார், ஆர் காமராஜ், ஆர்பி உதயகுமார் மற்றும் எம்ஆர் விஜயபாஸ்கர் ஆகிய அமைச்சர்கள் இடம்பெற்று இருந்தனர். சென்னையில் உள்ள 15 மண்டலங்களும் பிரிக்கப்பட்டு அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

இதில் திருவிக நகர், மணலி மற்றும் திருவொற்றியூர் ஆகிய மண்டலங்கள் அமைச்சர் உதயகுமாருக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக இன்று சிறப்பு அதிகாரி ராதா கிருஷ்ணன் அவர்களுடன் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயகுமார், சென்னை மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சத்து மாத்திரைகள், கபசுர குடிநீர் போன்றவை வழங்கப்படுவதாக கூறினார்.

தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு..? முதல்வருடன் இன்று ஆலோசனை..!

மேலும் சென்னையில் கொரோனா பாதிப்பை தடுக்க தெருவாரியாக 100% விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு மாநகராட்சி அதிகாரிகள் செயல்பட்டு வருவதாக கூறினார். மேலும் கொரோனா இல்லாத நாடாக நியூஸிலாந்து மாறியதைப் போன்று சென்னையும் விரைவில் கொரோனா இல்லாத நகரமாக மாறும் என தெரிவித்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here