தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு..? முதல்வருடன் இன்று ஆலோசனை..!

0
TN CM
TN CM

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்கக்கோரி கோரிக்கைகள் வலுவடைந்து வரும் நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுடன் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளார்.

பள்ளிப் பொதுத்தேர்வுகள்:

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் சங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் வரும் 11ம் தேதி விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. மேலும் இது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடல்நலம் சம்மந்தப்பட்ட விசயம் என்பதால் அதிகளவு கவனத்தை ஈர்த்து உள்ளது.

எனவே தேர்வுகளை நடத்துவது அல்லது ஒத்திவைப்பது குறித்து இன்று நண்பகல் 1 மணி அளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

ஏற்கனவே நீதிமன்றம் ஜூன் 15ம் தேதி தேர்வுகளை நடத்த அனுமதிக்க மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்து உள்ள நிலையில் இன்று நடைபெறும் கூட்டத்தில் தேர்வுகளை நடத்துவது அல்லது ரத்து செய்வது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் கட்டுப்படுத்தப்பட்ட நகரங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here