வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றாலும் வாக்களிக்கலாம் – வழிமுறைகள் இதோ!!

0

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் வாக்காளர் அட்டை இல்லையென்றாலும் கூட சில ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகம்:

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பல சிறப்பம்சங்களை தேர்தல் ஆணையம் அளித்துள்ளது. அவர்கள் கூறியதாவது வயதில் மூத்தவர்கள் விருப்பபட்டால் தபால் வாக்கு அளிக்கலாம் என்று புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளனர். மேலும் வாக்குச்சாவடிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளனர். தற்போது தேர்தல் குறித்து புதிதாக ஓர் தகவல் வெளியாகியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

எங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது – நீதிமன்றத்தில் கங்கனா ரணாவத் மனு!!

அது என்னவென்றால் தற்போது வாக்காளர் அட்டைக்காக புதிதாக பெயர் கொடுத்திருப்பவர்கள் சிலருக்கு வாக்காளர் அட்டை வரவில்லை. ஆனால் அவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கும். இதனால் அவர்கள் இந்த முறை நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் வாக்களிக்க முடியுமா என்று குழம்பி வருகின்றனர். இந்த குழப்பத்தை போக்கும் வகையில் ஓர் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வாக்காளர் அட்டை இல்லை என்றால் கூட தேர்தல் ஆணையம் அங்கீகரித்த ஆவணங்களை காட்டி ஒட்டு போடலாம் என்று தெரிவித்துள்ளனர்.

ஆவணங்கள்:

  • ஆதார் அட்டை
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு பணி அட்டை
  • வங்கி\அஞ்சலக கணக்கு புத்தகம்
  • ஓட்டுநர் உரிமம்
  • பான் கார்டு
  • மத்திய/மாநில அரசின் பணியாளர் அடையாள அட்டை
  • ஓய்வூதியம் ஆவணம்
  • கடவுசீட்டு
  • ஸ்மார்ட் கார்டு
  • நாடாளுமன்ற/சட்டப்பேரவை உறுப்பினர்களது அலுவலக அடையாள அட்டை
  • மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here