‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் வெளியேறும் பிரபலம்?? வைரலாகும் பதிவு!!

0

‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் நடிகை பவித்ரா சென்ற வாரங்களில் நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை. இதற்கான காரணத்தை பவித்ரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.

‘குக் வித் கோமாளி’ பவித்ரா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோ ‘குக் வித் கோமாளி’. சமையல் ஷோவாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில், சமையலை விட அதில் வரும் நகைச்சுவைக்கு தான் பார்வையாளர்கள் அதிகம். இதுவரை வெளியான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமான நட்சத்திரங்கள் ஏராளம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்தவகையில் குறும்படங்களில் நடித்து வந்த நடிகை பவித்ரா லட்சுமிக்கு ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ஏராளமான ரசிகர்களை சம்பாதித்து கொடுத்தது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வரும் பவித்ரா கடந்த வாரம் வெளியான செலிபிரேஷன் எபிசோடுகளில் கலந்து கொள்ளவில்லை.

நடிகர் கமலின் ‘விக்ரம்’ பட டீசர் – 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை!!

பவித்ரா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத காரணம் குறித்து அவரது ரசிகர்கள் வலைதளங்களில் கேள்வி எழுப்பி வந்தனர். ரசிகர்களின் கேள்விக்கு நடிகை பவித்ரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியின் மூலம் பதில் கொடுத்துள்ளார். அந்த பதிவில், சில சொந்த தனிப்பட்ட காரணங்களுக்காக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளமுடியவில்லை.

அடுத்த வாரம் ஒளிபரப்பாகும் எபிசோடில் நிச்சயம் கலந்து கொள்ளுவேன். உங்களை வருத்தப்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்கிறேன். உங்களது அன்புக்கும், அக்கறைக்கும் நன்றி என கூறியுள்ளார். பவித்ராவின் இந்த செய்தி அவரது ரசிகர்களுக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது. அடுத்த வாரம் வெளியாகும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கண்டிப்பாக பவித்ராவை எதிர்பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here