நடிகர் கமலின் ‘விக்ரம்’ பட டீசர் – 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை!!

0

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் ‘விக்ரம்’ படத்தின் டீசர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியானது. ரசிகர்களை வெகுவாக கவர்ந்த ‘விக்ரம்’ படத்தின் டீசர் இதுவரை 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

நடிகர் கமலின் ‘விக்ரம்’

நடிகர் கமல்ஹாசனின் 232வது படமாக உருவாகிக்கொண்டிருக்கிறது ‘விக்ரம்’ திரைப்படம். ‘கைதி’, ‘மாஸ்டர்’ ஆகிய வெற்றிப்படங்களின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இப்படம் வளர்ந்து வருகிறது. நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. கிரைம் திரில்லர் வகையில் உருவாகிவரும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

 

நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘விக்ரம்’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தற்போது ‘விக்ரம்’ படத்தின் ப்ரீப்ரொடக்சன் வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் நடிகர் பிரபுதேவா இணையவுள்ளதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க நடவடிக்கை – மத்திய அரசுஆலோசனை!!

1998ம் ஆண்டு வெளியான ‘காதலா காதலா’ என்ற படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் சேர்ந்து நடன இயக்குனரான நடிகர் பிரபுதேவா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியான ‘விக்ரம்’ படத்தின் டீசர் இதுவரை 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இருப்பதாக ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனலின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here