விஷால் இதுக்காக தான் திருமணம் பண்ணாம ஏமாத்துறாரு – நடிகர் உதயநிதி ஸ்டாலின் ஓபன்டாக்!!

0
விஷால் இதுக்காக தான் திருமணம் பண்ணாம ஏமாத்துறாரு - நடிகர் உதயநிதி ஸ்டாலின் ஓபன்டாக்!!

விஷால் நடிப்பில், இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் உருவாகி வரும்  லத்தி படத்தின் டீசர் விழாவில் பேசிய நடிகர் உதயநிதி ஸ்டாலின் விஷால் திருமணம் குறித்த முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

முக்கிய கருத்து:

நடிகர் விஷால் தனது வீரமே வாகை சூடும் திரைப்படத்தை அடுத்து, இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் லத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். அயோக்கியா படத்தை அடுத்து இந்த படத்தில் போலீஸ்  கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக சுனைனா நடிக்கிறார்.

படத்தின் டீசர் வெளியீட்டு விழா அண்மையில் பிரமாண்டமாக நடந்தது. இந்த விழாவில் பேசிய விஷால், நடிகர் சங்க கட்டிடத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் பெயரும், தற்போதைய முதல்வர் ஸ்டாலின் பெயரும்  இடம்பெற வேண்டும் என்பது என் கனவு. இது விரைவில் ஈடேற வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், லத்தி படத்திற்காக தனது மொத்த உழைப்பையும் போட்டுள்ளேன் என குறிப்பிட்டார். இவரைத் தொடர்ந்து பேசிய உதயநிதி, நடிகர் சங்க கட்டிடம் விரைவில் கட்டப்படும் என்றும், அதை சாக்காக வைத்து தான் விஷால் கல்யாணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி வருகிறார் என நகைச்சுவையாக குறிப்பிட்டார். இந்த கருத்து அங்கிருந்த அனைவருக்கும் சிரிப்பை  ஏற்படுத்தியது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here