தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. தன் முன்னாள் காதல் சர்ச்சையால் இவர் தன் சினிமா வாழ்க்கையில் ஒரு பெரிய பிரேக் எடுத்தபோதிலும் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்து விட்ட இடத்தை பிடித்தார். பின்னர் அறம், கோலமாவு கோகிலா, டோரா ஆகிய படங்களில் நடித்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயரையும் பெற்றார்.
இவரும் சமந்தாவும் இணைந்து காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமந்தா காபி வித் கரண் என்ற பாலிவுட் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றார். அதில் கரண் ஜோகர் தென் இந்திய திரைப்பட துறையில் பிரபலமான நடிகை யார் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு சமந்தா தென் இந்திய சினிமாவில் நயன்தாராதான் பெரிய நடிகை என்றார்.
உடனே கரண் ஜோகர் நயன்தாரா பெயர் என் லிஸ்டில் இல்லை என நக்கலாக கூறினார். அதற்கு சமந்தாவும் புன்னகைப்பது போல சைகை செய்தார். இந்த சம்பவம் தற்போது சர்ச்சைக்குள்ளானது. கடின உழைப்பின் மூலமே நயன்தாரா தற்போது இந்த இடத்திற்கு வந்துள்ளார். இவ்வாறு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அவரை இழிவுபடுத்துவது சரி அல்ல என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
@Samanthaprabhu2 Is such a Sweetheart & Sharing her Lovable bond with #Nayanthara ❤️ @karanjohar She is not far in your list coz Your list is full of Nepo-Products which doesn’t deserve any arguements and discussions. #KoffeeWithKaran #LadySuperStar pic.twitter.com/TDUXGT871Z
— A. (@ursavian) July 21, 2022
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்