கம்பீர் குறித்து பிசிசிஐக்கு கடிதம் அனுப்பிய விராட் கோலி…, ஐபிஎல் போட்டியால் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

0
கம்பீர் குறித்து பிசிசிஐக்கு கடிதம் அனுப்பிய விராட் கோலி..., ஐபிஎல் போட்டியால் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!
கம்பீர் குறித்து பிசிசிஐக்கு கடிதம் அனுப்பிய விராட் கோலி..., ஐபிஎல் போட்டியால் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

ஐபிஎல் தொடரில், லக்னோ அணியின் கவுதம் கம்பீருக்கு எதிரான வாக்குவாதத்தால், அபாரதம் விதிக்கப்பட்ட விராட் கோலி, பிசிசிஐக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விராட் கோலி:

பிளே ஆப் சுற்றை எதிர்நோக்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில், லக்னோ அணிக்கு எதிராக RCB அணி மோதிய ஆட்டத்தை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது. இதற்கு காரணம், RCB அணி ரிவன்ஞ் எடுக்கும் போட்டியாகவே இருந்தது. அதாவது, நடப்பு ஐபிஎல்லில் லக்னோ அணிக்கு எதிரான முதல் போட்டியை இழந்த RCB, 2வது போட்டியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பதிலடி கொடுத்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த போட்டியில், விராட் கோலி, கவுதம் கம்பீர் மற்றும் நவீன் உல் ஹக் இவர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது. இதனால், ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீருக்கு 100 சதவீதமும், நவீன் உல் ஹக்கு 50 சதவீதமும் போட்டிக்கட்டணத்தில் இருந்து அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராதத்தை விராட் கோலி வழங்கிய பிறகு பிசிசிஐக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.

ஐசிசி தரவரிசையில் இந்தியாவை முந்திய பாகிஸ்தான்…, உலக கோப்பைக்கு முன் இப்படி ஒரு மாற்றமா??

இந்த கடிதத்தில், “ப்ளடி எஃப்***… நான் அவருக்கு ஒரு செண்ட்-ஆஃப் கொடுக்க விரும்புகிறேன்” என்று தான் லக்னோ வீரரை பார்த்து கூறினேன். அது கம்பீருக்கு பிடிக்கவில்லை. இதற்கு நான், இந்த விசயத்தில் இருந்து நீங்கள் ஒதுங்கி இருக்க வேண்டும் என்று தான் கூறினேன். வேறு எதுவும் தவறாக கூறவில்லை என விராட் கோலி கடிதத்தில் தெரிவித்து இருப்பதாக, பிசிசிஐ தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here