மாநில அரசுக்கு ரூ.4,000 கோடி அபராதம்.., தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு!!!

0

பீகார் மாநில அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.4,000 கோடி அபராதம் விதித்து அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

பீகார் அரசு

இன்றைய காலகட்டத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியால் மக்களுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்பட்டாலும், அதில் உருவாகும் சுற்றுச்சூழல் கேடுகளை யாருமே பொருட்படுத்துவதில்லை. இதனால் தேசிய பசுமை தீர்ப்பாயம், மத்திய, மாநில அரசுகள் சுற்றுச்சூழல் மாசுகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் இப்போது பீகார் மாநில அரசு செய்த அலட்சியத்தால் தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ. 4000 கோடி அபராதம் விதித்துள்ளது. அதாவது பீகார் மாநில அரசு திட மற்றும் திரவ கழிவுகளை சரிவர மேலாண்மை செய்யாததால் புகார்கள் வந்த வண்ணம் இருந்துள்ளது. இதை கவனித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் தற்போது அபராதம் விதித்ததோடு மட்டுமல்லாமல், அபராத தொகையை 2 மாதத்திற்குள் ‘ரிங்-ஃபென்ஸ்’ கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்த அபராத தொகையை திடக்கழிவு செயலாக்க வசதிகள் அமைப்பதற்கும், பழைய கழிவுகளை சுத்திகரிப்பு செய்வதற்கும், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என பீகார் மாநில நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஈரமான கழிவுகளை தகுந்த இடங்களில் உரமாகுவதற்கும் பீகார் மாநில அரசு வழிவகை செய்ய வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here