ஐசிசி தரவரிசையில் இந்தியாவை முந்திய பாகிஸ்தான்…, உலக கோப்பைக்கு முன் இப்படி ஒரு மாற்றமா??

0
ஐசிசி தரவரிசையில் இந்தியாவை முந்திய பாகிஸ்தான்..., உலக கோப்பைக்கு முன் இப்படி ஒரு மாற்றமா??
ஐசிசி தரவரிசையில் இந்தியாவை முந்திய பாகிஸ்தான்..., உலக கோப்பைக்கு முன் இப்படி ஒரு மாற்றமா??

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியதன் மூலம், பாகிஸ்தான் அணி ஐசிசி தரவரிசையில் நம்பர் 1. இடத்தை பெற்றுள்ளது.

பாகிஸ்தான்:

இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் முதல், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிங் சார்பாக, ஒருநாள் உலக கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கு தயாராகும் வகையிலேயே, அனைத்து சர்வதேச அணிகளும், தங்களது போட்டிக்கான திட்டங்களை வகுத்து வருகின்றனர். இந்த வகையில், பாகிஸ்தான் அணியானது, உள்ளூர் நடைபெற்ற பிரீமியர் லீக் தொடரை விளையாடி முடித்த பிறகு, ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடியது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரை இழந்த பாகிஸ்தான், நியூசிலாந்தை எதிர்த்து தலா 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களை விளையாடியது. இந்த 5 ஒருநாள் தொடரில், தற்போது வரை 4 போட்டிகள் முடிந்துள்ளன. இந்த 4 போட்டிகளையும் பாகிஸ்தான் அணி வென்று தொடரை கைப்பற்றியதுடன், ஐசிசி தரவரிசையிலும் புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

ரெடி ஆகிக்கோங்க மக்களே…, மே 8-ல் இந்த பகுதிகளில் மின்தடை!!

அதாவது, ஒரு நாள் அணிகளுக்கான தரவரிசையில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகள் தலா 113 புள்ளிகளுடன் முதல் 3 இடங்களை பிடித்து இருந்தனர். தற்போது, நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றதன் மூலம், பாகிஸ்தான் அணியும் 113 புள்ளிகளை பெற்று, முதலிடத்தை எட்டி உள்ளது. இதன் மூலம், எதிர்வரும் உலக கோப்பை தொடருக்கு பாகிஸ்தான் அணி மற்ற அணிகளும் சிம்ம சொப்பனமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here