கோபிக்கு முதல் பதிலடி கொடுத்த பாக்கியா.,ராமமூர்த்தி எடுத்த அதிரடி முடிவு – அடுத்தகட்டத்தில் சீரியல்!!

0
கோபிக்கு முதல் பதிலடி கொடுத்த பாக்கியா.,ராமமூர்த்தி எடுத்த அதிரடி முடிவு - அடுத்தகட்டத்தில் சீரியல்!!
கோபிக்கு முதல் பதிலடி கொடுத்த பாக்கியா.,ராமமூர்த்தி எடுத்த அதிரடி முடிவு - அடுத்தகட்டத்தில் சீரியல்!!

பாக்கியலட்சுமி சீரியலில், ராதிகாவின் வித விதமான டார்ச்சரால், கோபிக்கு புலம்புவதே முழு நேர வேலையாக உள்ளது. இந்நிலையில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.

பாக்கியலட்சுமி சீரியல்:

இன்றைய எபிசோடில், இனியா ஸ்கூலுக்கு போக ரெடி ஆகி விட்டார், அந்த சமயத்தில் கோபியும் மயூவை ஸ்கூலுக்கு அழைத்து செல்ல வீட்டை விட்டு வெளியே வர இனியா கோபியை கோபமாக பார்க்கிறார். மேலும் கோபி எனக்கு லஞ்ச் இல்லையா என ராதிகாவிடம் கேட்க, நீங்க எப்பவும் வெளியதான சாப்பிடுவீங்க, வேணும்னா சொல்லுக உப்மா இருக்கு பேக் பண்ணி தரேன் என்று சொல்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த கோபி வேண்டாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்


போகும் வழியில் இனியா ஸ்கூலுக்கு நடந்து போகிறார், அப்போது கோபி வா நான் உன்ன டிராப் பண்றேன் என்று சொல்ல இனியா ஒன்றும் சொல்லாமல் போய்விட்டார். மறுபுறம் கோபி தன்னுடைய நண்பருடன் பேசி கொண்டிருக்கும் போது அவரது அக்கவுண்டுக்கு 40,000 ரூபாய் கிரெடிட் ஆகிறது. இதை பார்த்து அவர் யார் பணம் அனுப்பி இருப்பார் என யோசிக்க பாக்கியா கோபிக்கு போன் பண்ணுகிறார். அப்போது வீட்டிற்காக நான் உங்களுக்கு 40 லட்சம் தரேன்னு சொல்லிருந்தேன், அதோடு முதல் தவணையாக 40,000 இப்போ போட்டு இருக்கேன் பணம் வந்து இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க என சொல்லி போனை வைத்து விட்டார்.

ராதிகா 2ம் தாரத்து மகளின் மாப்பிளையை பார்த்துள்ளீர்களா.,இணையத்தில் பரவும் ட்ரெண்டிங் போட்டோ!!

இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற கோபி,போனை காதில் வைத்து கொண்டே இடியட் இடியட் என பாக்கியாவை திட்டுகிறார். மறுபுறம் மயூவை ஸ்கூலில் இருந்து அழைத்து கொண்டு வீடு திரும்பிய கோபிக்கு பயங்கர தலைவலி, ராதிகாவிடம் காபி கேட்க அவர் கண்டுகொள்ளாமல் மயூவை கவனிக்க சென்றுவிட்டார். இதனால் கோபி, இந்த வீட்ல நமக்கு காபியே கிடைக்காது என புலம்ப ஆரம்பித்துவிட்டார். இதையடுத்து பாக்கியா வீட்டிற்கு வந்த போஸ்ட் மேன் ,கோபி பெயரில் வந்த போஸ்டை டெலிவரி செய்ய போகும் போது, ராமமூர்த்தி கோபி அப்படின்ற பெயர்ல இங்க யாரும் இல்ல, இனி இந்த பெயருக்கு போஸ்ட் ஏதாச்சு வந்த இங்க கொண்டுவராதீங்க என சொல்லிவிட்டார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here