ரஞ்சிதமே ரஞ்சிதமே.., மனசை கலைக்கும் மந்திரமே.., தளபதி வாய்ஸில் தெறிக்கவிட்ட பர்ஸ்ட் சிங்கள்!!

0

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் புரோமோ வீடியோ வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

வாரிசு திரைப்படம்:

பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி, தளபதி விஜய் நடித்து தயாராகி வரும் திரைப்படம் தான் வாரிசு. இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் சுட சுட ஒவ்வொரு அப்டேட்டையும் படக்குழுவினர் இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

சமீபத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் படு வைரலாக பரவியது. மேலும் இப்படத்தின் இசை வெளியிட்டு விழா அடுத்த மாதம் நடைபெறலாம் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தளபதி ரசிகர்களை குஷிபடுத்தும் விதமாக வாரிசு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் புரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போகும் நபர் இவர் தான்.., உறுதியாக வெளிவந்த தகவல்!!

அதில் தளபதி குரலில் பாடிய “ரஞ்சிதமே ரஞ்சிதமே” பாடல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு செகட்டும் அனல் பறக்க நடனமாடியுள்ளார் விஜய். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் அனைவரும் வெடி போட்டு கொண்டாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here