பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போகும் நபர் இவர் தான்.., உறுதியாக வெளிவந்த தகவல்!!

0
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போகும் நபர் இவர் தான்.., உறுதியாக வெளிவந்த தகவல்!!

கமல் தொகுத்து வரும் பிக்பாஸ் சீசன் 6ல் இந்த வாரத்தில் வீட்டை விட்டு வெளியேற போகும் நபர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6:

பிக்பாஸ் சீசன் 6 மற்ற சீசன் -களை விட ஆரம்பத்தில் இருந்தே விறுவிறுப்பாக இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் இதில் பங்கு பெற்ற போட்டியாளர்கள் அனைவரும் மக்களிடம் பரிச்சையம் ஆனவர்கள். இந்த ஷோவில் இதுவரை இரண்டு பேர் எலிமினேட் ஆகியுள்ளனர். இந்நிலையில் இந்த வார எலிமினேட் நாமினேஷனில் ஆயிஷா, அசிம், விக்ரமன், கதிரவன் மற்றும் செரீனா ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதில் யார் வெளியே செல்ல போகிறார்கள் என்று ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்து கொண்டிருக்கின்றனர். இதில் செரீனா வெளியே செல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் ஆயிஷாவுக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். அதுபோல கதிரவனுக்கு ஏகப்பட்ட பெண்கள் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால் இந்த இரண்டு பேர் வெளியே போவதற்கு வாய்ப்பில்லை. இதை தொடர்ந்து அசிம் கடந்த இரண்டு வாரங்களில் இருந்ததை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது இந்த வாரத்தில் திருந்தி, வாய் சண்டை போடாமல் இருக்கிறார்.

பிரபல நடிகை லட்சுமியின் மூன்றாவது கணவர் இவர் தானா?? அடக்கடவுளே இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!

இதனால் இவர் உள்ளே இருக்க வாய்ப்பு அதிகம். மேலும் விக்ரமன், நல்ல எண்ணங்களை கொண்டவராகவும் ஒழுக்கத்துடனும் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து வருகிறார். இந்த காரணத்தால் விக்ரமன் கடுகளவு கூட வெளியே போக வாய்ப்பில்லை. இதனால் செரீனா தான் இந்த வாரயிறுதியில் பிக்பாஸ் வீட்டை விட்டு செல்வார் என கூறப்படுகிறது. கடந்த வாரம் இவரால் ஹவுஸ்மேட்ஸ்-குள் பிரச்சனை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here