விஜய்க்கு நேர்ந்த அதே சம்பவத்தை சந்தித்த ஷாருக் கான்.., ட்ரெண்டிங்காக்கும் புகைப்படம்!!

0

நடிகர் ஷாருக்கான் தனது 57வது பிறந்த நாள் அன்று ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட செல்பி போட்டோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நடிகர் ஷாருக்கான்:

பாலிவுட்டில் “கிங் கான்” புனைப்பெயருடன் ரசிகர்களால் அழைக்கப்படுபவர் தான் நடிகர் ஷாருக்கான். தற்போது இவர் நடிப்பில் ஜவான் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தனது 57வது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடினர்.

இவர் பிறந்த நாளை முன்னிட்டு பதான் படத்தின் டீசர் வெளியிட்டனர். இந்நிலையில் அவரது வீட்டின் முன்பு நள்ளிரவு முதல் ரசிகர்கள் கூட்டம் கூடத் தொடங்கியது. அந்த நேரத்தில் ஷாருக்கான் மற்றும் அவரது ஆசை மகனான ஆப்ராம் வீட்டிற்கு வெளியே குவிந்து வாழ்த்து தெரிவித்த ரசிகர்களுக்கு தங்களது நன்றிகளை தெரிவித்தனர்.

நெல்லையில் ரசிகர்களுடன் தளபதி விஜய் எடுத்த செல்பி போல், ஷாருக்கானும் தனது ரசிகர்களுடன் செல்பி எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here