மூச்சு திணறும் டெல்லி.,, பள்ளிகளை மூட வேண்டும்.,,NCPCR தலைவர் கடிதம்!!

0

தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுவை கட்டுப்படுத்தும் வகையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

பள்ளிகள் மூடல்:

கொரோனா வருகையால் நாடு முழுவதும் மூடப்பட்ட பள்ளிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள், தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளையும் மூட தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதாவது டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை குறைக்க அரசு பல வழிகளில் முயற்சி எடுத்து வருகிறது. அதாவது பட்டாசு வாங்க விற்க தடை முதல் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை பார்க்க அறிவுறுத்தல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் கையில் எடுத்து உள்ளது. இருப்பினும் காற்று மாசுபாடு குறைந்த பாடில்லை.

ஐ.டி ஊழியர்களுக்கு ஷாக்.,, Infosys நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!!

இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சுவாச கோளாறு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், டெல்லி தலைமை செயலாளருக்கு, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங்க் கனூங்கோ கடிதம் எழுதியுள்ளார்.

அதில் கடந்த சில நாட்களாக டெல்லியில் காற்றின் தரம் மிக மோசமான நிலையை எட்டி உள்ளது. இதனால் பொதுமக்கள் அதிக பாதிப்பை சந்திக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே காற்றின் தரம் மேம்படும் வரை டெல்லியில் பள்ளிகளை மூடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here