ராஷ்மிகா உடன் காதல்.. முதன் முதலாக வாயை திறந்த விஜய் தேவரகொண்டா – என்ன இப்படி சொல்லிட்டாரு!

0
விஜய் தேவர் கொண்டா பத்தி என்கிட்ட பேசாதீங்க - பத்திரிகையாளர் மீது சீறி பாய்ந்த நடிகை ராஷ்மிகா!!

ராஷ்மிகாவும், விஜய் தேவரகொண்டாவும் திருமணம் செய்துகொள்ள போகிறார்கள் என வதந்திகள் பரவிய நிலையில் விஜய் தேவர்கொண்டா தற்போது இது குறித்து பேசியுள்ளார்.

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா:

திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா 2018 ஆம் ஆண்டு விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து ”கீதா கோவிந்தம்” என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியான போதே இருவரும் காதலித்து வருவதாக கிசு கிசுக்கள் வந்தபடியே இருந்தன. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து இருவரும் மீண்டும் ”Dear Comrade” என்னும் திரைப்படத்திலும் இணைந்து நடித்தனர். வதந்திகளை மேலும் மேலும் மெருகேற்றும் விதமாக இருவரும் இணைந்து பாரிஸ்சுக்கு சுற்றுலாவும் சென்றனர்.

இதனால் இருவரும் காதலித்து வருகிறார்கள் என திரையுலக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. தற்போது இருவரும் திருமணம் செய்துகொள்ள போவதாகவும் செய்தி பரவ தொடங்கி விட்டது. வதந்திகளையெல்லாம் பொறுத்து கொண்டு அமைதியாக இருந்த விஜய் தேவர்கொண்டா தற்போது கோவமாகி இந்த திருமணம் குறித்தான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதாவது இது போன்ற செய்திகளை பரப்ப வேண்டாம், non sense என கோவத்தில் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here