இது என்னடா வலிமை படத்துக்கு வந்த சோதனை.. 4 மணி காட்சியும் ரத்து – பொங்கியெழுந்த ரசிகர்கள்!!!

0
இது என்னடா வலிமை படத்துக்கு வந்த சோதனை.. 4 மணி காட்சியும் ரத்து - பொங்கியெழுந்த ரசிகர்கள்!!!

வலிமை திரைப்படத்தினை முதல் நாள் முதல் காட்சி பார்க்க வேண்டும் என்பதே ரசிகர்கள் பலரின் கனவாக இருந்து வருகிறது. முதல் காட்சி 4 மணிக்கு தொடக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது முக்கிய தியேட்டர் ஒன்றில் 4 மணி காட்சி ரத்தாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

வலிமை காட்சிகள் ரத்து:

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் வரும் வியாழக்கிழமை அன்று திரையரங்கங்களில் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்திற்கான டிக்கெட் புக்கிங் ஞாயிற்றுகிழமையில் இருந்து விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. டிக்கெட் புக்கிங் ஆரம்பித்து சிலமணி நேரத்திலேயே பல தியேட்டர்களில் ஹவுஸ்புல் ஆகிவிட்டது. பலரும் வலிமை திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்துவிட வேண்டும் என ஆர்வத்தில் திரிந்து கொண்டிருக்கும் வேளையில் தற்போது ஒரு செய்தி வெளியாகி ரசிகர்களை கடுப்பாக்கியுள்ளது.

அதாவது வலிமை திரைப்படத்தின் முதல் காட்சி இரவு ஒரு 1மணிக்கு ஒளிபரப்பப்படும் என கூறப்பட்டது. அதற்கு பிறகு ஒரு மணி காட்சி ரத்தாகி அதிகாலை நான்கு மணி காட்சியாக அறிவிக்கப்பட்டது. தற்போது அந்த 4 மணி காட்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பிரபல ரோகினி திரையரங்க உரிமையாளர் தெரிவித்துள்ளார். இந்த செய்தியை கேட்டு ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர். முதல் காட்சி எத்தனை மணிக்கு துவங்கும் என்பதை இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here