‘பிரச்சனைன்னா கேட்குறதுக்கு நான் வருவேன்’….,மிரட்டலாக வெளியான ‘விடுதலை 1’ படத்தின் ட்ரைலர்…..,

0
'பிரச்சனைன்னா கேட்குறதுக்கு நான் வருவேன்'....,மிரட்டலாக வெளியான 'விடுதலை 1' படத்தின் ட்ரைலர்.....,
'பிரச்சனைன்னா கேட்குறதுக்கு நான் வருவேன்'....,மிரட்டலாக வெளியான 'விடுதலை 1' படத்தின் ட்ரைலர்.....,

போலீசுக்கும் மக்கள் படைத் தலைவனுக்கும் இடையே நடக்கும் மோதலை மையமாக கொண்டு ‘விடுதலை 1’ திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

விடுதலை ட்ரைலர்

பிரபல வெற்றிப்பட இயக்குனர் திரு. வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் ‘விடுதலை’. நடிகர் சூரி கதைநாயகனாகவும், விஜய் சேதுபதி ஒரு தலைவனாக மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த திரைப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகியுள்ளது. இந்த ட்ரைலரில், விரைவு ரயில் ஒன்று விபத்துக்குள்ளாகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த விபத்துக்கு பின்னணியில் இருக்கும் நபர்களை கண்டறிந்து கவுதம் வாசுதேவ் மேனன் தலைமையிலான போலீசார் என்கவுண்டர் செய்கின்றனர். ஆனால், இந்த விபத்துக்கு மூலக்காரணமாக இருப்பவர் மக்கள் படைத் தலைவன் பெருமாள் வாத்தியார், நடிகர் விஜய் சேதுபதி என்ற தகவல் போலீசுக்கு கிடைக்கிறது. அவரை தேடும் பணியில் காவல்துறை தீவிரமாக இறங்குகிறது.

இதற்கிடையில், மக்கள் படைத் தலைவனை பிடிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என்று சூரி தனது விருப்பத்தை தெரிவிக்க, மற்ற அதிகாரிகள் அவரை அவமானப்படுத்துகிறார்கள். இந்த சோகத்திற்கு மத்தியில் சூரிக்கும், ஒரு பெண்ணுக்கும் காதல் வருகிறது. மறுபக்கத்தில், விஜய் சேதுபதியின் பழைய புகைப்படத்தை வைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்குகின்றனர்.

மக்களே கவனம்., ரேஷன் கார்டு தொலைஞ்சு போச்சா? அடுத்த 5 நிமிடங்களில் வாங்கிக்கங்க!!!

அப்போது, விசாரணை என்ற பெயரில் பெண்களை சித்திரவதை செய்யும் கொடுமை போலிசாரால் அரங்கேறுகிறது. இதற்காக, அவர்களுக்கு பெரிய தண்டனை கொடுக்க வேண்டும் என விஜய் சேதுபதி திட்டமிடுகிறார். இந்த செயல் சூரிக்கும் கோபத்தை உண்டு பண்ணுகிறது. இறுதியில், விஜய் சேதுபதிக்கும், போலீசுக்கும் இடையே நடக்கும் யுத்தத்தில் யார் வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்புடன் வெளியாகி இருக்கிறது ‘விடுதலை’ பாகம் 1 திரைப்படத்தின் ட்ரைலர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here