மக்களே கவனம்., ரேஷன் கார்டு தொலைஞ்சு போச்சா? அடுத்த 5 நிமிடங்களில் வாங்கிக்கங்க!!!

0
மக்களே கவனம்., ரேஷன் கார்டு தொலைஞ்சு போச்சா? அடுத்த 5 நிமிடங்களில் வாங்கிக்கங்க!!!
மக்களே கவனம்., ரேஷன் கார்டு தொலைஞ்சு போச்சா? அடுத்த 5 நிமிடங்களில் வாங்கிக்கங்க!!!

தமிழகத்தில் அனைத்து தரப்பட்ட மக்களும் குடும்ப அட்டை மூலம் ரேஷன் கடைகளில் மலிவு விலையில் உணவுப் பொருட்களை பெற்று வருகின்றனர். இந்த குடும்ப அட்டைகள் நவீன யுகத்திற்கு ஏற்ப ஸ்மார்ட் கார்டாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் நுகர்வோர்கள் அலட்சியப்போக்கால் சில நேரங்களில் இந்த ஸ்மார்ட் கார்டை தொலைத்து விடுகிறார்கள். எனவே பெரும்பாலானவர்கள் இது தொடர்பாக ரேஷன் கடை உரிமையாளர்களிடம் அதிக பணத்தை கொடுத்து ஏமாற்றமடைந்து வருகின்றனர். ஆனால் இதற்கான வசதியை ஆன்லைனிலே எளிதில் பெற தமிழக அரசு வாய்ப்பு வழங்கி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதன்படி பயனாளர்கள் தமிழக உணவு வழங்கல் துறையின் கீழ் இயக்கப்படும் https://www.tnpds.gov.in/ என்ற இணையத்தளத்திற்கு செல்ல வேண்டும். இதில் பயனாளர் நுழைவில் user id ஐ உள்ளிட்டு ஸ்மார்ட் கார்டில் குறிப்பிட்ட மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும். பின்னர் அந்த மொபைல் எண்ணில் பெறப்படும் OTPயை இணைய தளத்தில் பதிவிட வேண்டும். இதன் பிறகு செல்லும் பக்கத்தில் Profile ஆப்ஷனை கிளிக் செய்து அதில் ஸ்மார்ட் கார்டின் பதிவிறக்கம் பட்டனை தொட வேண்டும்.

தமிழக விவசாயிகள் கவனத்திற்கு., வேளாண் அமைச்சர் வெளியிட்ட ஜாக்பாட் திட்டம்! விவரங்கள் உள்ளே!!

இவ்வாறு பதிவிறக்கம் செய்யப்பட்ட நகலை வைத்து ரேஷன் கடைகளில் வழக்கம் போல் உணவு பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும் இந்த நகலை உணவு வழங்கல் அலுவலகத்தில் சமர்ப்பித்து சில மாதங்களில் புதிய ரேஷன் அட்டை பெற்றுக்கொள்ளலாம். இதுகுறித்த மேற்பட்ட விவரங்களை 1800 425 5901 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம். எனவே இனிமேல் ஸ்மார்ட் கார்டு தொலைந்து விட்டால் உங்களுடைய மொபைலில் இதற்கு விண்ணப்பித்து, எளிய முறையில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here