உடலுக்கு வலுவும் மிரட்டலான சுவையும் கொடுக்கும் சுவரொட்டி வறுவல்., இந்த மாதிரி சமைத்து பாருங்க., மிச்சமே இருக்காது!!

0
உடலுக்கு வலுவும் மிரட்டலான சுவையும் கொடுக்கும் சுவரொட்டி வறுவல்., இந்த மாதிரி சமைத்து பாருங்க., மிச்சமே இருக்காது!!
உடலுக்கு வலுவும் மிரட்டலான சுவையும் கொடுக்கும் சுவரொட்டி வறுவல்., இந்த மாதிரி சமைத்து பாருங்க., மிச்சமே இருக்காது!!

பொதுவாக உடலில் இரத்தம் குறைந்து விட்டால் சுவரொட்டியை வாங்கி சாப்பிடும் படி மருத்துவர்கள் கூறுவது வழக்கம். அப்படி உடலுக்கு வலு கொடுத்து ரத்த சோகையை போக்கும் இந்த சுவரொட்டியை வைத்து சுவையான வறுவல் ரெசிபியை சமைப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்;

 • சுவரொட்டி – 2
 • சீரகம் – 1 டீஸ்பூன்
 • பட்டை – 1
 • கிராம்பு – 1
 • சோம்பு – 1 டீஸ்பூன்
 • உப்பு – தேவையான அளவு
 • மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
 • கறிவேப்பிலை – சிறிதளவு
 • எண்ணெய் – 3 டீஸ்பூன்
 • எலுமிச்சம் – 1/2 பழம்
 • சின்ன வெங்காயம் – 100 கிராம்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

செய்முறை விளக்கம்;

இந்த ரெசிபி தயாரிப்பதற்கு இரண்டு சுவரொட்டியை வாங்கி சுத்தமாக கழுவி கொள்ளவும். பிறகு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சிறிதளவு மஞ்சள் தூள் போட்டு இந்த சுவரொட்டியையும் சேர்த்து 20 நிமிடம் வேக வைக்கவும். மற்றொரு கடாயில் 2 டீஸ்பூன் மிளகுத் தூள்,1 டீஸ்பூன் சோம்பு, 1 டீஸ்பூன் சீரகம், 1 பட்டை, கிராம்பு போட்டு லைட்டாக வறுத்து பொடி செய்து கொள்ளவும் இதன் பின்னர் கடாயை அடுப்பில் வைத்து 3 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கி வைத்திருக்கும் 100 கிராம் சின்ன வெங்காயத்தை போட்டுக் கொள்ளவும்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் அதில் சிறிதளவு கருவேப்பிலை போட்டு நன்றாக வதக்கி விடவும். பின்னர் அதில் 1 டீஸ்பூன் மல்லி தூள், 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு அரைத்து வைத்திருக்கும் கரம் மசாலா பொடி ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு அதில் நாம் வேகவைத்து எடுத்து வைத்துள்ள சுவரொட்டியை சிறிய துண்டாக நறுக்கி அதை சேர்த்துக் கொள்ளவும். பின்னர் 1/4 டம்ளர் தண்ணீரை அதில் ஊற்றி கடாயை மூடி போட்டு மூடவும். மேலும் அதில் 1/2 எலுமிச்சம் பழத்தை அதில் பிழிந்து விட்டு அடுப்பை ஆப் செய்யவும். இப்போது நமக்கு சுவையான சுவரொட்டி வறுவல் ரெடி.

என்னது., மில்க் ஷேக் குடித்தால் உடலுக்கு இவ்ளோ பிரச்சனை வருமா? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here