
தென்னிந்திய திரையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் தான் ராம்கி. ஏகப்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்து பட்டையை கிளப்பி வந்த இவர் தற்போது துணை கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். மேலும் இவரும் நடிகர் அருண்பாண்டியனும் நடித்திருந்த ”இணைந்த கைகள்” திரைப்படம் ரசிகர்கள் மனதில் இன்றும் நீங்கா இடம் பிடித்துள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இப்படி இருக்கையில் இப்படத்தின் 2 ஆம் பாகத்தை இயக்க ராம்கி ஆசைப்படுகிறாராம். அதோடு அதில் நடிகர் கார்த்தி மற்றும் விஷால் ஆகியோர் இணைந்து நடித்தால் நன்றாக இருக்கும் என்ற தனது விருப்பத்தையும் தெரிவித்துள்ளார். அப்படி 33 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் 2 ஆம் பாகம் உருவாகும் பட்சத்தில் இப்படம் பிளாக் பஸ்டர் படமாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.