பொதுவாக சின்னத்திரையில் நடிக்கும் நடிகர்களுக்கு வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். அப்படி சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து பிரபலமானவர் தான் செந்தில். மேலும் என்னதான் இவர் ரேடியோ மிர்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி இருந்தாலும், இந்த நெடுந்தொடர் தான் இவரது கெரியரில் மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதையடுத்தே இவருக்கு பட வாய்ப்பும் கிடைக்க தொடங்கியது. மேலும் தற்போது இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அண்ணா சீரியலில் நடித்து வருகிறார். இப்படி இருக்கையில் விளம்பரம் ஒன்றில் ஜோதிகாவுக்கு ஜோடியாக இணைந்து நடித்துள்ளார். அப்போது எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.