பிரியாணி பிரியரா நீங்க? உங்களுக்காக சுவையான இறால் பிரியாணி ரெசிபி.!!

0
பிரியாணி பிரியரா நீங்க? உங்களுக்காக சுவையான இறால் பிரியாணி ரெசிபி.!!
பிரியாணி பிரியரா நீங்க? உங்களுக்காக சுவையான இறால் பிரியாணி ரெசிபி.!!

நம் வீடுகளில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணக் கூடியவை தான் பிரியாணி. மேலும் இந்த பிரியாணி ரெசிபியை பெரும்பாலோனோர் வீட்டில் சிக்கன், மட்டன் போட்டு சமைத்து இருப்போம். ஆனால் இன்றைக்கு நாம் பார்க்க போகும் இந்த பிரியாணி கொஞ்சம் வித்தியாசமாக இறாலை வைத்து சமைப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்

  • இறால் – 1/2 கிலோ
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் – 3 டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 5
  • மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் -1 டீஸ்பூன்
  • மல்லி தூள் – 1 டீஸ்பூன்
  • பிரியாணி மசாலா போட்டி – 2 டீஸ்பூன்
  • கொத்தமல்லி, புதினா – சிறிதளவு
  • நெய் – 2 டீஸ்பூன்
  • தேங்காய் எண்ணெய் – 3 டீஸ்பூன்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

செய்முறை விளக்கம்

இறால் பிரியாணி செய்வதற்கு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் 3 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றிக் கொள்ளவும். அதன் பிறகு பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு அதோடு நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதன் பிறகு பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

கடைசியாக தக்காளி, புதினா, மல்லி சேர்த்து நன்றாக வதக்கி அத்துடன் மிளகாய்த்தூள் மல்லித்தூள், பிரியாணி மசாலா சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும். பின் நாம் கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள இறால் சேர்த்து கிளறி விட்டுக் கொள்ளவும். இப்பொழுது ஒரு மணி நேரத்திற்கு முன்பு கழுவி ஊற வைத்த 1 கிலோ பாஸ்மதி அரிசி மற்றும் 1 1/2 லிட்டர் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வைத்து விடவும். அதன் பிறகு 2 விசில் வைத்து அடுப்பை ஆப் செய்யவும். இப்போது நமக்கு சுவையான இறால் பிரியாணி ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here