சச்சின் வரிசையில் ரோஹித் சர்மா…, சாதனை பட்டியலில் இணைந்து அசத்தல்!!

0
சச்சின் வரிசையில் ரோஹித் சர்மா..., சாதனை பட்டியலில் இணைந்து அசத்தல்!!
சச்சின் வரிசையில் ரோஹித் சர்மா..., சாதனை பட்டியலில் இணைந்து அசத்தல்!!

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில், இந்தியாவின் ரோஹித் சர்மா அரைசதம் அடித்து அதிக ஸ்ட்ரைக் ரேட் எடுத்ததன் மூலம் சாதனை பட்டியலில் இணைந்துள்ளார்.

ரோஹித் சர்மா:

இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில், இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்டது. இதில், 2வது போட்டியில், இந்திய அணியின் பவுலர்கள் தங்களது அசுர வேகத்தால் நியூசிலாந்து அணியை 108 ரன்களுக்குள் சுருட்டியது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த எளிய இலக்கை துரத்திய, இந்திய அணியில், தொடக்க வீரரான ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து அசத்தி இருந்தார். இந்த போட்டியில், ரோஹித் சர்மா 7 பவுண்டரி, 2 சிக்ஸர் உட்பட 51 ரன்களுடன் 102 ஸ்ட்ரைக் ரேட்டை எடுத்துள்ளார். இதன் மூலம், அதிக முறை 100க்கு மேல் ஸ்ட்ரைக் ரேட்டை வைத்த தொடக்க வீரர்களுக்கான பட்டியலில் ரோஹித் சர்மா இணைந்துள்ளார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் அசத்திய தமிழக வீரர்கள்…, குவியும் பாராட்டு!!

இந்த பட்டியலில், இலங்கையின் சனத் ஜெயசூர்யா (43), இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் (39), ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட் (35), வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெய்ல் (34) இவர்களுடன் ரோஹித் சர்மா (24) ஆகியோர் டாப் 5ல் இணைந்துள்ளார். இவர்களை தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் (23), இந்தியாவின் வீரேந்திர சேவாக் (22) என அடுத்த இரு இடங்களை பிடித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here