வெந்து தணிந்தது காடு படத்தின் ரகசியத்தை போட்டு உடைத்த சிம்பு.., அப்போ இன்னொரு சம்பவம் இருக்கு!!

0
வெந்து தணிந்தது காடு படத்தின் ரகசியத்தை போட்டு உடைத்த சிம்பு.., அப்போ இன்னொரு சம்பவம் இருக்கு!!
வெந்து தணிந்தது காடு படத்தின் ரகசியத்தை போட்டு உடைத்த சிம்பு.., அப்போ இன்னொரு சம்பவம் இருக்கு!!

தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் பாகம் குறித்து நடிகர் சிம்பு பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெந்து தணிந்தது காடு 2:

எழுத்தாளர் ஜெயமோகன் கதையை அடிப்படையாக கொண்டு கெளதம் மேனன் இயக்கி நடிகர் சிம்பு நடித்த திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு. கடந்த செப் 15ம் தேதி வெளியான இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக ரசிகர்கள் படத்தை பெரிதாக கொண்டாடி வருகிறார்கள். முழுக்க முழுக்க மாறுபட்ட கேங்ஸ்டர் படமாக இருப்பதால் ரசிகர்களை அதிகளவில் ஈர்த்துள்ளது. அதாவது முத்து என்கிற இளைஞன் பிழைப்புக்காக மும்பை செல்கிறான்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

கேங்ஸ்டர்களால் துன்புறுத்தப்படும் நாயகன் பின்னர் தானே கேங்ஸ்டாராக உருவெடுப்பதை போன்று கதை அமைந்துள்ளது. இருந்தாலும் படத்தில் சண்டை காட்சிகள் கம்மி தான் என்று ரசிகர்கள் வருத்தப்பட்டு வந்தனர். அவர்கள் கவலையை போக்கும் விதமாக நடிகர் சிம்பு அதிர்ச்சி சம்பவத்தை தெரிவித்துள்ளார். இப்படம் வெளியாவதற்கு முன்னே வெந்து தணிந்தது காடு திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாக இருக்கிறது என்று தகவல்கள் வெளியானது.

தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்கள் நியமனம் குறித்து அதிரடி உத்தரவு – கல்வித்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

இதை உறுதிப்படுத்த விதமாக நடிகர் சிம்பு கூறியதாவது, வெந்து தணிந்தது காடு படத்தில் முத்து கதாபாத்திரம் எப்படி கேங்ஸ்டர் ஆனார் என்பது குறித்து இருந்ததால் சண்டைக்காட்சிகள் குறைவாக இருந்ததாகவும், இரண்டாம் பாகத்தில் கேங்ஸ்டர் ஆக வருவதால், நிச்சயம் சண்டை காட்சிகள் அதிக அளவில் இருக்கும் என்று கூறியுள்ளார். இதை கேட்ட ரசிகர்கள் குஷியாகி உள்ளார்கள். மேலும் படத்துக்காக இப்போது இருந்து எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here