தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்கள் நியமனம் குறித்து அதிரடி உத்தரவு – கல்வித்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

0
தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்கள் நியமனம் குறித்து அதிரடி உத்தரவு - கல்வித்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள மாற்று பணி ஆசிரியர்களுக்கு பதிலாக, தற்போதைக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்து கொள்ளலாம் என, பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

கல்வித்துறை உத்தரவு :

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை, TET தேர்வின் மூலமாக தேர்வு செய்து, கல்வித்துறை அவர்களுக்கு பணி நியமனங்களை வழங்கி வருகிறது. ஆசிரியர் தகுதி தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் இந்த தேர்வில், வெற்றி பெறும் தேர்வுகள் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுகிறார்கள். அந்த வகையில், தமிழகத்தில் இல்லம் தேடி கல்வி என்ற ஒரு திட்டத்தின் மூலம் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழக ரேஷன் கார்டுதாரர்களுக்கு சர்ப்ரைஸ் – ஒரே அறிவிப்பில் மொத்த சந்தேகத்தையும் தீர்த்த அரசு!!

இந்த நிலையில், தமிழகப் பள்ளிகளில் மாற்றுப் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு பதிலாக, தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக் கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இவர்களுக்கு சம்பளமாக ரூ.7500ம், ரூ.12,000 மற்றும் ரூ.15,000 என தொகுப்பூதியமாக வழங்கலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது. விரைவில் இதற்கான, அதிகாரப்பூர்வ அரசாணை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here