பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் காவியா விலக காரணம் இதுதான்.., வெளியான உண்மை காரணம்!!

0

விஜய் டிவியில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். இந்த சீரியலில், முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் காவியா அறிவுமணி சீரியலை விட்டு விலகி உள்ளார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

தொடரை விட்டு விலகும் காவியா:

பல எதிர்பாராத திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்து உள்ளது. அதாவது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அண்ணன், தம்பிகள் என கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தவர்களிடையே, இப்போது ஒரு சில பிரிவுகள் ஏற்பட்டிருக்கிறது. சீரியலில் முல்லையாக நடித்த விஜே சித்ரா மறைவுக்கு பிறகு, முல்லை கதாபாத்திரத்தில், ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடித்து வந்த காவியா அறிவுமணி நடித்து வருகிறார்.

சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி வீட்டில் விசேஷம்.., விசிட் அடித்த முக்கிய பிரபலங்கள்!!

முதலில் ரசிகர்கள் அவரை அவ்வளவாக ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், போகப்போக வரவேற்பைப் பெற்றார். இந்நிலையில் காவியா அறிவுமணி , பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து விலகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது காவ்யா வெள்ளித்திரையில் கால் பதித்து விட்டதாகவும், அதனால் தான் அவர் சீரியலில் இருந்து விலகி விட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இனி முல்லையாக “அபிநயா” என்பவர் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது முல்லை கதாபாத்திரத்திற்கு இப்பொழுது அந்த அளவிற்கு மவுசு இல்லாத காரணத்தால் அவர் விலகி விட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் அவருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு வந்துகொண்டே உள்ளது. சீரியலில் நடிப்பதால் படத்தில் நடிக்க கவனம் செலுத்த முடியவில்லையாம். அதனால் தான் சீரியலை விட்டு விலகி விட்டாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here