லிப் லாக் Scene-ஆ? ஆள விடுங்கப்பா சாமி – திட்டவட்டமாக மறுத்த நடிகர் சிம்பு! வைரலாகும் தகவல்!!

0
லிப் லாக் Scene-ஆ? ஆள விடுங்கப்பா சாமி - திட்டவட்டமாக மறுத்த நடிகர் சிம்பு! வைரலாகும் தகவல்!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள படத்தில், முக்கியமான காட்சி ஒன்றில் நடிக்க சிம்பு மறுத்து விட்டதாக படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் தகவல்:

நடிகர் சிம்பு நடிப்பில், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி அண்மையில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம், சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. அப்பாவி கிராமத்து இளைஞனாக இருந்த சிம்பு, மும்பை நகரத்தில் எப்படி கேங்ஸ்டர் லீடராக மாறுகிறார் என்பதுதான் படத்தின் கதை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்தப் படத்திற்காக சிம்பு தனது உடல் எடையை கணிசமாக குறைத்து, தனது வெறித்தனமான நடிப்பை கொடுத்துள்ளார். தொடர்ந்து படம், வசூலில் கல்லா கட்டி வருகிறது. இந்த நிலையில் படத்தில், சிம்பு குறித்த சுவாரசிய தகவல் ஒன்றை இயக்குனர் பகிர்ந்துள்ளார்.

போண்டாமணி உயிரை காப்பாற்ற ஹெல்ப் பண்ணுங்க.., நடிகர் வெளியிட்ட உருக்கமான வீடியோ!!

அதாவது இந்த படத்தில், ஒரு லிப் லாக் காட்சி இருந்ததாகவும் அதனை சிம்புவிடம் நடிக்க சொல்லி தான் எவ்வளவோ? வற்புறுத்தியதாகவும், ஆனால் நடிகர் சிம்பு இதில் நடிக்க திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். ஒரு காலத்தில் இது போன்ற நெருக்கமான காட்சிகளில், பட்டையை கிளப்பிய சிம்பு தற்போது பிரச்சனைகளை உணர்ந்து இதிலிருந்து நழுவி விட்டதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here