இந்தியாவிலும் தொடங்கிய பொருளாதார மந்த நிலை.,ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிவு!!

0
இந்தியாவிலும் தொடங்கிய பொருளாதார மந்த நிலை.,ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிவு!!
இந்தியாவிலும் தொடங்கிய பொருளாதார மந்த நிலை.,ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிவு!!

இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. அந்த வகையில் இன்றும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு பெருமளவில் சரிவை சந்தித்துள்ளது.

சரிவை சந்தித்து வரும் ரூபாயின் மதிப்பு :

இந்தியாவில் கொரோனா வருகையால், பணவீக்கம் கடுமையாக உயர்ந்து வருகிறது. மேலும் மத்திய அரசு இந்த பணவீக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதை தொடர்ந்து ரஷ்யா உக்ரைன் போரால் ஏற்பட்ட பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக, உலக நாடுகளும் திணறி வருகிறது. மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்ததால் பல நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தி விட்டன.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனால் சர்வதேச சந்தையில் எண்ணெய் மற்றும் எரிவாயுவின் விலை கடுமையாக உயர்ந்தது. இதை தொடர்ந்து உணவு தானியங்கள், சமையல் எண்ணெய் ஆகியவற்றின் விலையும் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இந்த விலைவாசி உயர்வு சாமானிய மக்களை பெருமளவில் தாக்கியது. இந்நிலையில் இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் 80.28 ஆக சரிவு அடைந்துள்ளது.

‘இந்த படத்துல எனக்கு கண்டிப்பா அது கிடைக்கும்’ – பேட்டியில் சூசகமாக பேசிய நடிகை தமன்னா!

இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளின் எதிரொலியாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.80.11 ஆக சரிந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவது ஆபத்தானது என நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here