போண்டாமணி உயிரை காப்பாற்ற ஹெல்ப் பண்ணுங்க.., நடிகர் வெளியிட்ட உருக்கமான வீடியோ!!

0
போண்டாமணி உயிரை காப்பாற்ற ஹெல்ப் பண்ணுங்க.., நடிகர் வெளியிட்ட உருக்கமான வீடியோ!!
போண்டாமணி உயிரை காப்பாற்ற ஹெல்ப் பண்ணுங்க.., நடிகர் வெளியிட்ட உருக்கமான வீடியோ!!

சுமார் 200 படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் போண்டாமணி, தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்குப் போராடி வருகிறார்.

வைரல் வீடியோ:

இலங்கையை பூர்விகமாகக் கொண்ட போண்டா மணி, பாக்யராஜ் கதாநாயகனாக நடித்த ‘பவுனு பவுனுதான்’ திரைப்படம் மூலமாக 1991ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து 200 படங்களில், பல கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இவர் நடித்த படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. காமெடி நடிகர் வடிவேலு மற்றும் போண்டா மணியின் காம்போ அனைவரையும் கவர்ந்தது.

கடந்த மே மாதம் இருதய கோளாறு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் நடிகர் போண்டாமணி அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு 2 சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதாகவும், அவருக்கு உதவ வேண்டும் என நடிகர் பெஞ்சமின் கோரிக்கை விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் நடிகர் பெஞ்சமின் கூறுவது, அண்ணன் போண்டா மணி அவர்களுக்கு 2 கிட்னிகளும் செயலிழந்து விட்டது.

எனவே உயிருக்குப் போராடும் அவருக்கு, இந்த வீடியோவை பார்க்கும் நண்பர்கள் அவரது மேல் சிகிச்சைக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இலங்கையிலிருந்து அனாதையாக வந்தவர். அனாதையாகவே போகக் கூடாது, ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க என பெஞ்சமின் வேண்டுகோள் விடுத்துள்ளார். நடிகர் பெஞ்சமின் வெளியிட்ட இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here