சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி வீட்டில் விசேஷம்.., விசிட் அடித்த முக்கிய பிரபலங்கள்!!

0
சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி வீட்டில் விசேஷம்.., விசிட் அடித்த முக்கிய பிரபலங்கள்!!
சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி வீட்டில் விசேஷம்.., விசிட் அடித்த முக்கிய பிரபலங்கள்!!

சூப்பர் சிங்கர் பிரபலம் செந்தில் கணேஷ்- ராஜலட்சுமி வீட்டில் மிக பிரமாண்டமாக நடைபெற்ற விசேஷத்தில் விஜய் டிவி பிரபலங்கள் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.

வைரல் வீடியோ:

விஜய் டிவியில், ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் சீசன் 6 நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர்கள்தான் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி. நாட்டுப்புறப் பாடல்களை எழுதி, மேடையில் பாடுவது தான் இவர்களது சிறப்பு அம்சம். மேலும் சூப்பர் சிங்கர் சீசன் 6 டைட்டிலை செந்தில் கணேஷ் அசால்டாக தட்டி சென்றார். இதை தொடர்ந்து செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி இருவருக்கும் படங்களில் பாடுவதற்கு வாய்ப்புகள் குவிந்தன.

அதிலும் தம்பதியராக சார்லி சாப்ளின் 2’ படத்தில் பாடிய ‘என்ன மச்சான் பாடலும், புஷ்பா படத்தில் ராஜலக்ஷ்மி பாடிய சாமி பாடலும் பட்டிதொட்டி எல்லாம் ஒலித்தது. மேலும் அடுத்தடுத்து இவர்களுக்கு சினிமாவில் பாடும் வாய்ப்பு வந்துக் கொண்டிருக்கிறது. இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் இருவரும் சேர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில் செந்தில் – ராஜலட்சுமி வீட்டில் கடந்த வாரம் புதுமனை புகுவிழா மற்றும் அவர்களின் 2 குழந்தைகளுக்கும் காதணி விழா விசேஷம் நடந்து உள்ளது.

அந்த வீடியோ சமூக வலைதளத்தில் அனைவராலும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.மிகவும் விமர்சையாக நடைபெற்ற இந்த விசேஷத்திற்கு முக்கிய பிரபலங்கள் ஏராளமானோர் வந்துள்ளனர். முக்கியமாக அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். மேலும் நாட்டுப்புற இசை கலைஞர்களால் இந்த நிகழ்ச்சி மேலும் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here