தமிழக ரேஷன் கார்டுதாரர்களுக்கு சர்ப்ரைஸ் – ஒரே அறிவிப்பில் மொத்த சந்தேகத்தையும் தீர்த்த அரசு!!

0
தமிழக ரேஷன் கார்டுதாரர்களுக்கு சர்ப்ரைஸ் - ஒரே அறிவிப்பில் மொத்த சந்தேகத்தையும் தீர்த்த அரசு!!
தமிழக ரேஷன் கார்டுதாரர்களுக்கு சர்ப்ரைஸ் - ஒரே அறிவிப்பில் மொத்த சந்தேகத்தையும் தீர்த்த அரசு!!

தமிழகத்தில், பயன்படுத்தப்படாமல் உள்ள ரேஷன் கார்டுகளை ரத்து செய்வது பற்றிய முக்கிய விளக்கத்தை, கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.

ரேஷன் கார்டு ரத்து:

தமிழகத்தில், உணவு வழங்கல் துறை கீழ் ரேஷன் கார்டுகள், மூலம் மலிவு விலையில் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ரேஷன் பொருட்களை பெறுவதோடு மட்டுமல்லாமல், அரசின் நலத்திட்டங்களை பெறுவதிலும் இந்த ரேஷன் ஸ்மார்ட் கார்டு முக்கிய பங்கு வகிக்கிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த நிலையில் நாடு முழுவதும், பயன்படுத்தப்படாமல் உள்ள கோடிக்கணக்கான ரேஷன் கார்டுகளை மத்திய அரசு ரத்து செய்து வருகிறது. இதனைப் பின்பற்றி மாநில அரசுகளும், அதிரடி நடவடிக்கையை துவக்கியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில், பயன்படுத்தப்படாமல் உள்ள ரேஷன் கார்டுகள் குறித்த கணக்கெடுப்பு பணி அண்மையில் துவங்கியது.

மாநிலத்தில் பட்டாசு விற்க, வெடிக்க தடை.,, அரசின் அதிரடி உத்தரவு!!

இதனால் தங்கள் ரேஷன் கார்டுகளும் ரத்து செய்யப்படுமோ? என பொதுமக்கள் அச்சத்தில் இருந்து வந்தனர். இது குறித்து விளக்கம் அளித்த கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுவது ரேஷன் கார்டுகளை ஒழுங்குபடுத்துவதற்கு தானே தவிர, ரத்து செய்வதற்காக அல்ல என விளக்கம் அளித்துள்ளார். போலி ரேஷன் கார்டு, சட்டவிரோத ரேஷன் பொருட்கள் விற்பனை இதனை தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை என, அரசு விளக்கம் அளித்துள்ளது. இதனால் ரேஷன் பயனர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here