தமிழகத்தில் 10 ஆண்டுக்கு பின் உயரும் ஆட்டோ கட்டணம்? அரசின் முடிவை எதிர்நோக்கும் ஓட்டுனர்கள்!!

0
தமிழகத்தில் 10 ஆண்டுக்கு பின் உயரும் ஆட்டோ கட்டணம்? அரசின் முடிவை எதிர்நோக்கும் ஓட்டுனர்கள்!!
தமிழகத்தில் 10 ஆண்டுக்கு பின் உயரும் ஆட்டோ கட்டணம்? அரசின் முடிவை எதிர்நோக்கும் ஓட்டுனர்கள்!!

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு, சென்னையில் ஆட்டோ கட்டணத்தை உயர்த்துமாறு ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில் அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆட்டோ கட்டணம்:

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக, ஆட்டோ கட்டணம் மறு நிர்ணயம் செய்யப்படவில்லை. ஏற்கனவே அரசின் சார்பில் கிலோ மீட்டருக்கு ரூ.12 என அரசு நிர்ணயித்த கட்டணமே தற்போது வரை தொடர்கிறது. தற்போது இந்த கட்டணத்தை கிலோ மீட்டருக்கு ரூ. 25 என மறு நிர்ணயம் செய்ய வேண்டும் என ஓட்டுநர் தொழிற்சங்கங்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இதற்காக அரசிடமும் நீதிமன்றத்திலும் ஏற்கனவே, பலமுறை முறையிடப்பட்டுள்ளதாகவும் ஆனால், இதற்கான எந்த முடிவும் இதுவரை எட்டப்படவில்லை எனவும் தொழிற்சங்கத்தினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

தமிழக ரேஷன் கார்டுதாரர்களுக்கு சர்ப்ரைஸ் – ஒரே அறிவிப்பில் மொத்த சந்தேகத்தையும் தீர்த்த அரசு!!

இதுகுறித்து பேசிய சிஐடியு ஆட்டோ சங்கம் மாநில செயலாளர் பாலசுப்பிரமணியன், அரசு உடனடியாக தலையிட்டு அறிவிப்பு வெளியிட வேண்டும் எனவும், மொபைல் செயலி ஒன்றை இதற்காக உருவாக்கி பொதுமக்கள் மற்றும் ஓட்டுனர்களுக்கான ஆட்டோ பயண பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here