மதுர பொண்ணுன்னா சும்மாவா.., 6 தங்க பதக்கங்களுடன் இந்தியா வருகை.., குவியும் வாழ்த்துக்கள்!!

0
மதுர பொண்ணுன்னா சும்மாவா.., 6 தங்க பதக்கங்களுடன் இந்தியா வருகை.., குவியும் வாழ்த்துக்கள்!!

சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் மதுரையை சேர்ந்த மாற்றுத்திறனாளி வீராங்கனை ஜெர்லின் அனிகா 6 தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.

ஜெர்லின் அனிகா

தாய்லாந்தில் ஆசிய பசிபிக் காது கேளாதோர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வந்தது. இந்த போட்டியில் பல நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். அதன்படி இந்தியாவில் இருந்து மதுரையை சேர்ந்த ஜெர்லின் அனிகாவும் இந்த பேட்மிண்டன் போட்டியில் கலந்து கொண்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதன்படி ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டியில் ஆதித்யா யாதவை எதிர்கொண்டு 21- 6, 21-14 என்ற செட்களில் ஜெர்லின் வெற்றி பெற்றார். இதே போன்று நடைபெற இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் ஜெர்லின், ஆதித்யா யாதவ் ஜோடி 21-13, 21-15 என்ற செட்களில் செஜட்டோ எம்.சி, லா.சி ஒய் ஜோடியை வீழ்த்தி வெற்றியை தனதாக்கிக் கொண்டனர். இதனை தொடர்ந்து நடைபெற்ற மற்ற போட்டிகளிலும் ஜெர்லின் அனிகா வெற்றிகளை குவித்துள்ளார்.

உங்க வேகத்துக்கு அளவே இல்ல.., மித்தாலி ராஜ் சாதனையை முறியடித்த ஸ்மிருதி.., மாஸ் காட்டிட்டீங்க!!

இதனால் ஜெர்லின் அனிகாவுக்கு ஜூனியர் பிரிவில் 3 தங்கப் பதக்கங்களும், ஒபன் பிரிவில் 3 தங்கப் பதக்கங்கள் உட்பட மொத்தமாக 6 தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளது. இத்தனை தங்க பதக்கங்கள் குவித்த அனிகா இன்று மதுரை வருகிறார். இவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் அனிகா மதுரை லேடி டோக் காலேஜில் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here