அசைவ சுவையில் சைவ முட்டை கிரேவி.., மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும் ரெசிபி!!

0
அசைவ சுவையில் சைவ முட்டை கிரேவி.., மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும் ரெசிபி!!
அசைவ சுவையில் சைவ முட்டை கிரேவி.., மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும் ரெசிபி!!

வழக்கமாக நாம் முட்டையை வைத்து கிரேவி, பொரியல், பொடிமாஸ், ஆம்லெட் என்று விதவிதமாக செஞ்சு சாப்பிடுவது வழக்கம். ஆனால் இப்போது முட்டையே இல்லாமல் பன்னீரை வைத்து சுவையான வெஜ் முட்டை கிரேவி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • பன்னீர் – 200 கிராம்
  • உருளைக்கிழங்கு – 2
  • கான் பிளார் மாவு – 2 டேபிள்ஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 3 டேபிள் ஸ்பூன்
  • எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
  • சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்
  • பட்டை, கிராம்பு – தேவையான அளவு
  • பெரிய வெங்காயம் – 2
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
  • தக்காளி – 3
  • உப்பு – 1 டேபிள் ஸ்பூன்
  • மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
  • மல்லி தூள் – 2 டேபிள் ஸ்பூன்
  • கர மசாலா – 1 டேபிள் ஸ்பூன்
  • மிளகு தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
  • சீரக தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
  • கடலை மாவு – 1 டேபிள் ஸ்பூன்
  • கொத்தமல்லி – சிறிதளவு
  • பச்சை மிளகாய் – 2

செய்முறை :

வெஜ் முட்டை கிரேவி செய்வதற்கு முதலில் 200 கிராம் பன்னீரை எடுத்து தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். பின் வேக வைத்த 2 உருளைக்கிழங்கை மாவு பதத்திற்கு மிக்ஸியில் அரைத்து பன்னீருடன் மிக்ஸ் செய்து கொள்ளவும். இத்துடன் கான் மாவையும் சேர்த்து நன்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும். இப்போது பிசைந்து வைத்துள்ள மாவில் சிறிதளவு தனியாக எடுத்து மஞ்சள் தூள் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

மீதமுள்ள மாவை உருண்டை பிடித்து தட்டையாக்கி மஞ்சள் கலந்து வைத்துள்ள மாவை உள்ளே வைத்து சுருட்டி முட்டை ஷேப்புக்கு தயார் செய்யவும். பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் தயார் செய்து வைத்துள்ள உருண்டையை போட்டு பொரித்து கொள்ளவும். அடுத்ததாக ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை, கிராம்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். இத்துடன் அரைத்து வைத்துள்ள 2 பெரிய வெங்காயத்தையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

பின் இஞ்சி பூண்டு பேஸ்ட், 2 தக்காளி சேர்த்து வதக்கவும். இவை வதங்கியவுடன் மிளகாய், மல்லி, கரம் மசாலா, மிளகு, சீரகத்தூள், கடலை மாவு சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இவைகள் அனைத்தும் நன்கு வதங்கி எண்ணெய் பிரிந்து வரும் நிலையில் தேவையான அளவு தண்ணீர், பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து கொதிக்க விடவும். கடைசியாக பொரித்து வைத்துள்ள முட்டையை இதில் சேர்த்து ஒரு நிமிடம் வேகவைத்து உடனே இறக்கி விடவும். இப்போது நமக்கு சுவையான வெஜ் முட்டை கிரேவி தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here