வாரிசு திரைப்படத்தின் புதிய அப்டேட் – முக்கிய நடிகர் லீக் செய்த புகைப்படம்! ரசிகர்கள் கொண்டாட்டம்!!

0

தளபதி விஜயின் அடுத்து உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், சென்னை, விசாகப்பட்டினம் என சூட்டிங் நடந்து வருகிறது. இந்நிலையில் சூட்டிங் ஸ்பாட் போட்டோக்களும் லீக்காகி விட்டது.

வாரிசு படம்:

கோலிவுட் வட்டாரங்களில் பல வெற்றிப் படங்களை கொடுத்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர் தான் தளபதி விஜய். அதுமட்டுமின்றி பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன் மன்னனாக வலம் வருபவர் . தொடக்கத்தில் அவருக்கு பல விமர்சனங்கள் எதிராக அமைந்தது, ஆனால் தொடர்ந்து அயராது உழைத்து தற்போது முன்னணி நடிகராக திகழ்கிறார். அவருக்கு குழந்தைகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் என தனக்கென ரசிகர் பட்டாளமே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் படம் வெளியே வந்தாலே பண்டிகை போல் கொண்டாடி வருவது வழக்கம். இந்நிலையில் தளபதி அடுத்த படமான வாரிசு படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். வாரிசு படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், சென்னை, விசாகப்பட்டினம் என ஷூட்டிங் நடந்து வருகிறது. இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்களும் லீக்காகி விட்டது.

இதனை தொடர்ந்து இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, குஷ்பூ, ஷாம் என முன்னணி நடிகர்கள் பலர் நடித்து வருகின்றனர். விறுவிறுப்பாக எடுத்து வரும் படப்பிடிப்பின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர் மத்தியில் படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நடிகர் சரத்குமார் படப்பிடிப்பு தளத்தில் இருந்து புதிய புகைப்படத்தை எடுத்து இணையத்தில் வெளியிட்டு லைக்குகளை பெற்று வருகிறார். இந்த புகைப்படத்தால் தளபதி விஜயின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Sarath Kumar (@r_sarath_kumar)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here