வாரிசை தட்டி தூக்கிய ரெட் ஜெயண்ட் மூவிஸ்.., தளபதிக்கு ஸ்கெட்ச் போட்ட உதயநிதி.., வெளியான அப்டேட்!!

0
வாரிசை தட்டி தூக்கிய ரெட் ஜெயண்ட் மூவிஸ்.., தளபதிக்கு ஸ்கெட்ச் போட்ட உதயநிதி.., வெளியான அப்டேட்!!
வாரிசை தட்டி தூக்கிய ரெட் ஜெயண்ட் மூவிஸ்.., தளபதிக்கு ஸ்கெட்ச் போட்ட உதயநிதி.., வெளியான அப்டேட்!!

ரெட் ஜெயண்ட் மூவிஸ் துணிவு படத்தை வாங்கிய நிலையில் தற்போது விஜய் நடிக்கும் வாரிசு படத்தையும் வாங்கியுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

துணிவு – வாரிசு:

கோலிவுட்டில் உச்ச நட்சத்திரங்களாக இருந்து வருபவர்கள் தான் நடிகர் விஜய் -அஜித். தற்போது அவர்கள் நடிப்பில் உருவான வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு நேருக்கு நேர் போட்டி போட்டு இறங்குகிறது. இரண்டு பெரிய ஹீரோக்கள் நடித்த படங்கள் வெளியாவதால் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. சமீபத்தில் வாரிசு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை 7 கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் வாங்கியுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் துணிவு படத்தின் தியேட்டர் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் உரிமையாளர் உதயநிதி ஸ்டாலின் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வாரிசு படத்தையும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வாங்கியுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கீர்த்தி சுரேஷின் சொந்த வீட்டை பார்துள்ளீர்களா? நெருங்கிய உறவுகளுடன் அவர் எடுத்த போட்டோஸ்!!

மேலும் ஒரே நாளில் இரண்டு படங்கள் சந்திப்பதால் சமமாக தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் முன்னர் தெரிவித்திருந்தார். அதேபோல் தற்போது சென்னை மற்றும் செங்கல்பட்டு இரண்டு பகுதிகளிலும் உள்ள தியேட்டர்கள் சம அளவில் பிரிக்கப்படும். மேலும் எந்தெந்த தியேட்டர்களில் எந்த படம் வெளியாக இருப்பது குறித்து தகவல் கூடிய விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here