வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழக்கு – ஐகோர்ட் கிளையில் இன்று விசாரணை!!

0

தமிழக முதல்வர் சில தினங்களுக்கு முன்பு வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு செய்வதாக கூறி அரசாணையை வெளியிட்டார். தற்போது இதனை தடை விதிக்க கூறிய வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

இடஒதுக்கீடு:

தமிழகத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் பல்வேறு அதிரடி திட்டங்களை அறிவித்து வருகிறார். மேலும் மக்களை கவரும் வகையில் பல திட்டங்களை அறிவித்தார். அந்த வகையில் வன்னியர்களுக்கு 10.5% தனி இட ஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்தார். இதனை சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த மசோதாவை அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த அரசாணையை கண்டித்து தேனி மாவட்டம் உத்தம்பாளையத்தை சேர்ந்த சின்னாண்டி என்பவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் – அமமுக கட்சி நேர்காணல் தேதி அறிவிப்பு!!

அவர் கூறியதாவது, ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்திய பின்பே இட ஒதுக்கீடு குறித்து முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார். மேலும் அதுவரை அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் கூறிய அவர் இது சட்ட விதிகளுக்கு எதிரானது, குரும்ப கவுண்டர் சமூகத்தை சேர்ந்த 30 லட்சம் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்று தெரிவித்தார். தற்போது இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here