‘கல்யாணமாவது, குடும்பமாவது ஆளை விடுங்க’ – பீட்டர் பாலை பற்றி பேசிய வனிதா!!

0

சமூக வலைத்தளங்கள் திறந்தாலே அது எப்பொழுதுமே வனிதா பற்றிய செய்திகள் நிறைந்திருக்கும். அந்த அளவிற்கு இந்த ஆண்டில் சர்ச்சைக்குரிய ராணியாகவே இருக்கிறார். இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு பீட்டர் பாலை பற்றி வாய் திறந்துள்ளார். அதிலும் இதுக்கு மேல கல்யாணமாவது, குடும்பமாவது ஆளை விடுங்க என்று கூறியுள்ளார் வனிதா.

வனிதா விஜயகுமார்

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் வனிதா விஜயகுமார். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி அவருக்கு பெரிய வாய்ப்பாக அமைந்தது என்றே சொல்லலாம். மேலும் மக்கள் மத்தியிலும் நாளடைவில் நல்ல பெயரை சம்பாதித்தார். குக் வித் கோமாளியின் டைட்டில் வின்னர், யூடுப் சேனல் என தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருந்தார்.

இதற்கிடையில் வந்தவர் தான் பீட்டர் பால். வனிதாவும், பீட்டர் பாலும் திருமணம் செய்துகொண்டதால் பல பிரச்சனைகள் ஏற்பட்டது. மேலும் 6 மாதம் கூட இருக்காது வனிதா அவரையும் துரத்தி விட்டார். 2 நாட்கள் அழுதாலும் நாளடைவில் அதனை மறந்தே விட்டார். இந்நிலையில் வனிதா சட்டிஸ்கர் எல்லாம் சென்று வந்து ஆளே அடையாளம் தெரியாமல் ஸ்டைலாக மாறினார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனாலும் இப்பொழுதும் வனிதா என்றாலே அந்த செய்தி காட்டுத்தீ போல் பரவி விடுகிறது. இந்நிலையில் வனிதா தனது இன்ஸ்டா பக்கத்தில் In Love Again பதிவிட்டு உமாரியாஸ் குறிப்பிட்டு இருந்தார். என்னவாக இருக்கும் என அனைவரும் ஆவலுடன் காத்திருந்த நிலையில் ஒரு ஹோட்டலில் உமாரியாஸ் மற்றும் வனிதா ஒரு மீட்டிங்கை போட்டனர்.

அதனால் அப்போ அது இதுக்கு தானா என அனைவருக்கு போர் அடிக்க தான் செய்தது. ஆனாலும் சில முக்கியமான தகவல்களையும் வனிதா பகிர்ந்துள்ளார். அதாவது வனிதாவிடம் உமாரியாஸ் இனிமேல் ஒரு கல்யாணம் பண்ணிக்குவியா என்று கேட்க அப்பொழுதுதான் உன் அசைய ஏன் கெடுக்கணும் என்று In Love Again என பதிவிட்டுள்ளார்.

வத்திக்குச்சியில் இருந்து காட்டுப்பூச்சியாக மாறிய வனிதா – கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்!!

அதன் பிறகு இதுக்கு மேல கல்யாணமாவது, குடும்பமாவது ஆளை விடுங்க என்றும் காமெடி செய்துள்ளார் வனிதா. பீட்டர் பாலின் போன் நம்பர் இன்னும் வச்சு இருக்கியா?? என கேட்க போனையே தூக்கி காட்டியுள்ளார். அப்போ பீட்டர் பாலை முழுசா தலைமுழுகியாச்சு என நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here