இந்திய பேட்ஸ்மேன்களை துவம்சம் செய்த ஹேசில்வுட் – டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்!!

0
MELBOURNE, AUSTRALIA - DECEMBER 26: Josh Hazlewood of Australia celebrates getting the wicket of Babar Azam of Pakistan during day one of the Second Test match between Australia and Pakistan at Melbourne Cricket Ground on December 26, 2016 in Melbourne, Australia. (Photo by Quinn Rooney - CA/Cricket Australia/Getty Images)

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள், 3 டி 20 மற்றும் 4 டெஸ்ட் தொடர்களை ஆடவுள்ளது. இதில் ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கோப்பையை கைப்பற்றியது. மூன்று டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதலாவது டெஸ்ட் தொடரானது அடிலெய்டில் 17-ம் தேதி தொடங்கியது. விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணியும், டிம் பைன் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும் மோதின.

முதல் இன்னிங்ஸ்:

டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது இந்தியா. தொடக்க ஆட்டக்காரர் ப்ரித்வி ஷா டக் -அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான மயங்க் அகர்வாலும் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஆடிய கேப்டன் கோஹ்லி 74 ரன்களில் ரன் -அவுட் ஆனார். மற்ற வீரர்களும் நிலைத்து ஆடவில்லை. இதனால் முதல் இன்னிங்ஸில் 244 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது இந்தியா.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் யாரும் நிலைத்து ஆடாத நிலையில் ,கேப்டன் பைன் மற்றும் லபுஸ்சாக்னே இருவர் மட்டுமே அணியின் ஸ்கோரை உயர முயற்சித்தனர். இருப்பினும் 191 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது ஆஸ்திரேலியா.

இரண்டாவது இன்னிங்ஸ்:

இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி 36 ரன்களில் 9 விக்கெட்டுகளை இழந்து டிக்ளேர் செய்தது. டெஸ்ட் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் இந்திய அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும். ஆஸ்திரேலியா சார்பில் பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளும், ஹேசில்வுட் 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதில், இந்திய வீரர் அஸ்வினின் விக்கெட்டை கைப்பற்றியபோது ஹேசில்வுட் டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை எடுத்து புதிய சாதனையை படைத்துள்ளார்.

‘ஒரு வீரர் கூட 10 ரன்னை தாண்டவில்லை, 96 ஆண்டுகளில் முதல்முறை’ !!

அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் பட்டியலில் வார்னே 708 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார். தற்போது, இந்த வரிசையில் 17வது இடத்தில் உள்ளார் ஹேசில்வுட்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here