அஜித் வலிமை படத்தின் ரிலீஸ் அப்டேட் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

0

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது வலிமை படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். தற்போது இவரது வலிமை திரைப்படம் ரிலீஸ் ஆகும் தேதி குறித்து ஓர் தகவல் வெளியாகியுள்ளது.

வலிமை:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் தான் தல அஜித். இவரை இவரது ரசிகர்கள் பாசமாக தல என்று அழைத்து வருவார்கள். ஆண்டுக்கு 1 படம் மட்டுமே நடித்து வெளியிட்டு வந்தாலும் இவரது படத்தை காண்பதற்கு இவரது ரசிகர்கள் தவமிருந்து காத்து வருவார்கள் என்றே சொல்லலாம். மேலும் கடந்த ஆண்டு கொரோனா காலம் என்பதால் திரையரங்குகள் மூடப்பட்டது. இதனால் பெரிய நடிகர்களின் படம் வெளியாகவில்லை. மேலும் கடந்த 1 ஆண்டுக்கும் மேலாக தல படத்தை பற்றிய அப்டேடும் வெளிவரவில்லை.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் இவரது ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர். நேர்கொண்ட பார்வையின் வெற்றிக்கு பின்பு தல அஜித் மீண்டும் ஹெச்.வினோத்துடன் இணைந்துள்ளார். தற்போது வினோத் வலிமை என்னும் திரைப்படத்தை அஜித்தை வைத்து இயக்கி வருகிறார். மேலும் இந்த படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். வலிமை படம் பற்றிய அப்டேட்களை ரசிகர்கள் போனி கபுரிடம் கேட்டு வரும் வண்ணமாக இருக்கின்றனர். ஆனால் ஒரு அப்டேடும் இதுவரை வெளிவரவில்லை. தற்போது தல அஜித் நடித்து வரும் வலிமை திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

பரபரப்பான சூழ்நிலையில் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் – இன்று தொடக்கம்!!

படப்பிடிப்பு முடிய இன்னும் 15 நாட்கள் மட்டுமே உள்ளதாம். எனவே வலிமை திரைப்படம் ஏப்ரல் 29 அல்லது தல பிறந்தநாளான மே 1ம் தேதி அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படத்தின் ஒரு சில காட்சிகள் வெளிநாட்டில் படமாக்க திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். வெளிநாட்டில் அதற்கு அனுமதி கிடைக்குமா, மேலும் கொரோனா கட்டுப்பாடு என பல பிரச்சனைகள் உள்ளதால் ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறது. எனவே வலிமை திரைப்படம் நேர்கொண்ட பார்வை படம் போலவே ஆகஸ்ட் மாதம் 2 வது வாரத்தில் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here