பங்குச்சந்தை நிலவரம் இன்று உயர்வுடன் தொடக்கம் – முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!!

0

கடந்த சில நாட்களாக சரிந்து வந்த பங்குச்சந்தை நிலவரம் இன்று ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமாக உள்ள 30 நிறுவங்களின் பங்கு சந்தை நிலவரத்தில் 14 நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளது.

இந்தியாவில் பங்கு சந்தை நிலவரம்

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பங்குச்சந்தை நிலவரம் அதிகப்படியாக குறைந்தது. பொது முடக்கம் காரணமாக தொழில்நிறுவனங்கள் முடங்கப்பட்டதால், பங்கு சந்தை சரிந்து வந்தது. அதற்கு பின்பாக வந்த நாட்களில் பங்குச்சந்தை அதிகபட்ச உயர்வினை சந்தித்தது. இது முதலீட்டாளர்களை மகிழ்ச்சியினை ஏற்படுத்தியது.

பெட்ரோல், டீசல் விலை இன்றைய நிலவரம்!!

இப்படியான சுழலில், இன்று 5 நாட்களுக்கு பிறகு பங்குச்சந்தை நிலவரம் உயர்வுடன் தொடங்கியது. கடந்த 5 நாட்கள் சரிவுடன் துவங்கிய வர்த்தக நிலை இன்று உயர்ந்தது, முதலீட்டாளர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் 159.46 புள்ளிகள் உயர்த்து, 47,003.83 என்ற புள்ளி நிலையில் உள்ளது. இது சராசரியாக இருக்கும் வர்த்தகத்தை விட 0.14 சதவீதம் அதிகமாக கருதப்படுகிறது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இது மட்டும் அல்லாமல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் (நிப்டி) 52.25 புள்ளிகள் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக இன்று வர்த்தகம் நிப்டியில் 13, 869.80 என்ற புள்ளிகளுடன் துவங்கியது. இது சராசரி பங்குச்சந்தை நிலவரத்தை விட 0.13 சதவீதம் உயர்வு ஆகும். இன்றைய சென்செக்ஸ் உள்ள 30 நிறுவனங்களில் 14 நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளது. முன்னிலையில் எம் & எம் நிறுவனம் 4.12 சதவீத உயர்வுடன் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் இந்துஸ்இந்த் வங்கி மற்றும் பஜாஜ் பைனான்ஸ் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here