இந்த வருடத்தில் காதலர் தினத்தை கொண்டாடும் பிரபலங்கள் – லிஸ்ட் இதோ!!

0

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 ஆம் தேதியில் காதலர்கள் தினம் கொண்டாடப்படும். தற்போது இந்த வருடத்தில் இந்த காதலர் தினத்தை கொண்டாடும் பிரபலங்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

காதலர்கள் தினம்

ஜாதி, மதம் என அனைத்தையும் துறந்து ஒரு ஆணிற்கும் பெண்ணிற்கும் இடையே உருவாகும் இந்த காதல் எப்பொழுதுமே உலகத்தில் அழியாத ஒன்றாக கருதப்படுகிறது. தற்போது வரை காதல் திருமணத்திற்கு பல எதிர்ப்புகளும் தடைகளும் இருந்தாலும் அதனையும் தாண்டி இந்த காதல் வாழ்ந்துகொண்டு தான் உள்ளது.

தற்போது இந்த வருடத்திலும் பல காதல்கள் துளிர்க்க தான் செய்திருக்கும்.அந்த வகையில் பல பிரபலங்கள் தங்களின் காதலர் தினத்தை கொண்டாடி வருகின்றனர். சின்னத்திரையிலும் சரி, வெள்ளித்திரையில் சரி தனது பல காதலர்கள் உருவாகியுள்ளனர்.

பத்திரங்களில் கையெழுத்திட நேரடியாக செல்ல தேவையில்லை – ‘இ-கவர்னன்ஸ் சர்வீஸ் அமைப்பு’!!

ஆரம்பத்தில் வெள்ளித்திரையில் பல படங்களில் ஜோடி சேர்ந்த நடிகர்-நடிகைகள் திருமணம் செய்துகொண்டனர். ஆனால் தற்போது சின்னத்திரையிலும் சீரியலில் ஜோடியாக நடிப்பவர்கள் நிஜ ஜோடியாக வலம் வருகின்றனர். இதுவரையிலும் நாம் எதிர்பார்க்காத விதமாக பல ஜோடிகள் இந்த ஆண்டில் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஜீ தமிழில் ‘பூவே பூ சூடவா’ ஜோடி மதன்-ரேஷ்மா ஜோடி 2021 நியூ இயரில் தங்களது காதலை வெளிப்படுத்தினர். மேலும் கலர்ஸ் சேனலில் திருமணம் சீரியலில் நடித்த சித்து-ஷ்ரேயா ஜோடி இந்த வருடத்தில் காதலர் தினத்தை கொண்டாடியுள்ளனர்.  விஜய் டிவியில் வெளியான ப்ரோமோவில் காதலே காதலே நிகழ்ச்சியில் ஆர்யா மற்றும் சயிஷா ஜோடி இணைத்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் சஞ்சீவ்-ஆலியா நிஷா மற்றும் அவரது கணவர். தங்கதுரை ஜோடி போன்றோர் பங்குபெற்று கலக்கியுள்ளார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் நாயகி நிரஞ்சினி – தேசிங் இந்த வருடத்தில் காதலர் தினத்தை கொண்டாடி வருகின்றனர். நயன்தாரா-விக்னேஷ் பல வருடங்களாக காதலர் தினத்தை கொண்டாடி வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரம்யா-சோம் காதலித்து வருவதாக சொல்லப்பட்டது. ஆனால் தற்போது வரை அவர்கள் அதனை வெளிப்படுத்தவும் இல்லை. மேலும் திரையிலும் ஜோடியாக இருந்து நிஜ வாழக்கையிலும் பல நடிகைன் நடிகர்கள் இணைந்துள்ளனர்.

அஜித்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா. ஸ்னேகா-பிரசன்னா போன்றோர் தற்போது வரை மக்கள் மத்தியில் நிலைத்து இருக்கும் தம்பதிகள். இந்த வருடத்தில் காதலர் தினத்தை கொண்டாடும் அனைத்து காதல் உள்ளங்களுக்கு இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here