சீனா, இத்தாலியை முந்திய அமெரிக்கா – உலகளவில் கொரோனா பலி எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டியது..!

0

உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கட்டுக்கடங்காமல் உள்ளது. இதில் இருந்து வல்லரசு நாடுகளும் தப்பவில்லை. தற்போதைய நிலவரப்படி வைரஸ் உருவான சீனா மற்றும் அதிக உயிரிழப்புகளை கொண்ட இத்தாலியை விட அமெரிக்காவில் இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

24 ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்பு..!

உலகில் இதுவரை 195 நாடுகளுக்கு பரவி உள்ள கொரோனா வைரஸினால் 5,32,224 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். வைரஸ் தாக்கத்தில் இருந்து 1,24,326 பேர் குணமடைந்து உள்ளனர். கொரோனா வைரஸினால் இதுவரை 24,087 பேர் உயிரிழந்து உள்ளனர்.

உலகளவில் அமெரிக்காவில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. அங்கு இதுவரை 85,594 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் அமெரிக்காவில் 1,300 பேர் உயிரிழந்து உள்ளனர். நோய் பரவத்தொடங்கிய நாடான சீனாவில் இதன் தாக்கம் தற்போது கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81,340 ஆக உள்ளது. மேலும் இதுவரை உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 3,292 ஆக உள்ளது.

இத்தாலியில் 8 ஆயிரத்திற்கும் மேல் பலி:

இத்தாலியில் இதுவரை 80,585 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் அங்கு உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 8,215 ஆக உள்ளது. ஸ்பெயினில் 57,786 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் 4,365 பேர் உயிர் இழந்து உள்ளனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here