2020 இல் முதல்நிலை தேர்வில் வாய்ப்பை இழந்தவர்களுக்கு மறுவாய்ப்பு – யுபிஎஸ்சி ஒப்புதல்!!

0

கொரோனா பரவல் காரணமாக கடந்த முறை வயது அடிப்படையில் தேர்வு எழுதும் வாய்ப்பை இழந்து தவிப்பவர்களுக்கு தற்போது கூடுதல் வாய்ப்பை வழங்க யுபிஎஸ்சி சம்மதித்துள்ளது. இதனால் தேர்வு எழுத காத்திருந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

யுபிஎஸ்சி:

இந்தியா ஆட்சி பணி, இந்தியா காவல் பணி உள்ளிட்ட குடிமை பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 2020-21ம் ஆண்டுக்கான முதல்நிலை தேர்வை யுபிஎஸ்சி திட்டமிட்ட தேதியை விட 4 மாதம் தாமதமாக தான் நடைபெற்றது. காரணம் கடந்த ஆண்டு கொரோனா பரவல் இருந்தது. ஆனால் கடந்த ஆண்டில் முதல் நிலை தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று ரச்னா சிங் என்னும் தேர்வு எழுதுபவர் உச்ச நீதிமன்றத்தில் ஓர் வழக்கை தொடர்ந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு வந்தது. ஆனால் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டு இருக்கும் போதே யுபிஎஸ்சி கடந்த மாதம் முதன்மை தேர்வை நடத்தியது. இதைத்தொடர்ந்து வயது அடிப்படையில் கடந்த ஆண்டு யுபிஎஸ்சி எழுதுவதற்கான கடைசி வாய்ப்பை இழந்து தவித்து வரும் மாணவ மாணவிகளுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்குவதற்காக பரிசீலிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கும் யுபிஎஸ்சிக்கும் உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்தது.

சவரனுக்கு ரூ.224 குறைந்த ஆபரண தங்கத்தின் விலை – இன்றைய மாலை நிலவரம்!!

யுபிஎஸ்சி ஒப்புதல்:

இதனை தொடர்ந்து இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர் மற்றும் கவாய் மற்றும் கிருஷ்ண முராரி அமர்வுக்கு வந்தது. நீதிமன்ற பரிந்துரையை மத்திய அரசு ஏற்கனவே ஏற்றுக்கொண்டது. தற்போது யுபிஎஸ்சியும் மறு வாய்ப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் தேர்வு எழுதுவதற்காக காத்திருந்த மாணவர்கள் தற்போது மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மறுவாய்ப்புக்கான தேர்வு வரும் ஜூன் மாதம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here