#INDvsENG டெஸ்ட் முதல் நாள் ஆட்டம் முடிவு – வலுவான நிலையில் இங்கிலாந்து!!

0

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் தற்போது முடிவுக்கு வந்த்துள்ளது. இதில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்களை இழந்து வலுவான நிலையில் உள்ளது.

இந்தியா vs இங்கிலாந்து:

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி தற்போது தங்களுடைய முதல் டெஸ்ட் போட்டியை துவங்கியுள்ளது. இந்த போட்டி இந்தியா நேரப்படி இன்று காலை 9.30 மணி அளவில் சென்னை மைதானத்தில் வைத்து துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய தொடரில் விலகிய விராட் கோஹ்லி இந்த தொடர் மூலம் அணியில் இணைந்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இங்கிலாந்து அணி தரப்பில் துவக்க ஆட்டக்காரர்களாக பர்ன்ஸ் மற்றும் சிப்லே களமிறங்கினர். இங்கிலாந்து அணிக்கு துவக்கம் சிறப்பாக அமைந்தது. இந்த ஜோடி தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 63 ரன்கள் குவித்த நிலையில் பர்ன்ஸ் 33 ரன்கள் எடுத்த நிலையில் அஷ்வினிடம் வீழ்ந்தார். அடுத்து களம் வந்த லாரன்ஸ் 0 பூம்ராஹ்விடம் வீழ்ந்து டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.

வலுவான நிலையில் இங்கிலாந்து:

தொடர்ந்து 2 விக்கெட்களை இழந்து இங்கிலாந்து அணி திணறி வந்தது. அதன்பிறகு இங்கிலாந்து அணியின் ரூட் களம் வந்தார். இந்நிலையில் சிப்லே மற்றும் ரூட் ஜோடி சேர்ந்து இருவரும் பொறுப்புடம் அணிக்கு ரன்களை சேர்த்து வந்தனர். இந்த போட்டி ரூட்டிற்க்கு 100 வது டெஸ்ட் போட்டி. இந்த சிறப்பான நிகழ்வில் ரூட் தனது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சிப்லே தனது அரை சதத்தை பதிவு செய்து அசத்தினார்.

2020 இல் முதல்நிலை தேர்வில் வாய்ப்பை இழந்தவர்களுக்கு மறுவாய்ப்பு – யுபிஎஸ்சி ஒப்புதல்!!

இவரை தொடர்ந்து ரூட்டும் தன் பங்கிற்கு அரை சதத்தை கடந்தார். அதன்பின்பு இருவரும் இந்தியா அணியின் பந்து வீச்சை சுலபமாக எதிர்கொண்டு விளையாடி வந்தனர். இவர்களது விக்கெட்டை வீழ்த்த இந்தியா அணியின் பந்துவீச்சாளர்கள் எடுத்த முயற்சி அனைத்தும் வீணானது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரூட் தனது 20 வது சதத்தை பதிவு செய்து அசத்தினார். தன்பங்கிற்கு சிப்லேவும் சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் சிப்லே 87 ரன்கள் எடுத்த நிலையில் பும்ராஹ் வேகத்தில் வீழ்ந்தார். பின்பு முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்தியா அணி தரப்பில் பும்ராஹ் 2 மற்றும் அஸ்வின் 1 விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர். தற்போது ரூட் களத்தில் அவுட் ஆகாமல் இருக்கிறார்.

லைவ் ஸ்கோர்:

முதல் நாள் ஆட்டம் முடிவில் இங்கிலாந்து அணி – 263/3

ரூட் – 128*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here