திரைப்படங்கள் ஓடிடியில் வெளியானால் திரையரங்குகள் மூடப்படும் – தியேட்டர் உரிமையாளர்கள் எச்சரிக்கை!!

0

கொரோனா ஊரடங்கு தளர்விற்கு பிறகு அதிகமான திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகி வருகின்றன. இதை எதிர்த்து திரையரங்கு உரிமையாளர்கள் மார்ச் 1 முதல் திரையரங்குகள் மூடப்படும் என எச்சரித்துள்ளனர்.

ஓடிடி தளத்தில் வெளியீடு

கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பிறகு திரையரங்குகள் தற்போது 100 சதவீத பார்வையாளர்களுடன் திறப்பட்டுள்ளன. இருந்தாலும் அதிகமான படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளன. அனைவரும் பெரிய அளவில் எதிர்பார்த்த ‘மாஸ்டர்’ திரைப்படமும் திரையரங்குகளில் வெளியான, இரண்டு வார காலங்களிலேயே ஓடிடி தளத்தில் வெளியானது. இது திரையரங்கு உரிமையாளர்களை அதிருப்திக்குள்ளாக்கியது. மேலும் இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் இடையே கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.

‘வேளாண் சட்டங்களை விவசாயிகளை ஏற்றுக்கொள்ள கட்டாயப்படுத்துவது தற்கொலைக்கு சமம்’ – ஜி.வி.பிரகாஷ் கருத்து!!

தொடர்ந்து நடிகர் தனுஷ் நடித்துள்ள ”ஜகமே தந்திரம்” படமும் விஷால் நடித்துள்ள ”சக்ரா” படமும் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தெலுங்கானாவில் தியேட்டர் அதிபர்கள் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர். பெரிய பட்ஜெட் படம் என்றால் தியேட்டரில் ஆறு வாரம் ஓடிய பின்பே ஆன்லைனில் வெளியிட வேண்டும் என்றும், அதே போல சிறிய பட்ஜெட் படம் என்றால் தியேட்டரில் நான்கு வாரம் ஓடிய பின்பே ஆன்லைனில் வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இல்லையென்றால் மார்ச் 1 முதல் திரையரங்குகள் மூடப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இது தெடர்பாக தியேட்டர் உரிமையாளர்கள் கூறும்போது , ‘சில தயாரிப்பாளர்கள் படம் வெளியாகி குறைந்த நாட்களிலேயே ஆன்லைனில் வெளியிட விரும்புகின்றனர். படம் வெளியாகும் போதே அதன் வெளிநாட்டு உரிமையையும் கொடுத்து விடுகின்றனர். இதனால் படம் வெளியான அடுத்த நாளே இணையதளத்தில் வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதை தடுக்க தயாரிப்பாளர்கள், தியேட்டர் உரிமையாளர்களுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தமிழகத்திலும் தியேட்டர்களை மூடும் சூழ்நிலை உருவாக்கலாம்’ என கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here