அவரசகால தடுப்பூசிக்கான விண்ணப்பம் வாபஸ் – ஃபைசர் நிறுவனம் அறிவிப்பு!!

0

இந்தியாவில் அவசர கால பயன்பாட்டிற்காக தனது கொரோனா தடுப்பூசியை போடும்படி மத்திய அரசாங்கத்திடம் விண்ணப்பித்திருந்தது ஃபைசர் நிறுவனம். தற்போது அந்த விண்ணப்பத்தை திரும்ப பெற்றுள்ளது.

கொரோனா தடுப்பூசி

இந்தியாவில் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட்டின் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இந்த இரண்டு தடுப்பூசிகளும் மக்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பு சோதனை மாதிரியாக செலுத்தப்பட்டு, மக்களுக்கு உபயோகிக்கும்படி ஒப்புக்கொள்ளப்பட்டது. முன்னதாக இந்தியாவில் கொரோனா அவசரகால பயன்பாட்டிற்காக ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை பயன்படுத்த கோரி மத்திய அரசுக்கு அந்நிறுவனம் விண்ணப்பம் அளித்திருந்தது.

‘எம்எல்ஏக்கள் ‘ஆப்பிள்’ டேப்லெட் வாங்க வாங்கி வர வேண்டும்’ – முதன்மை செயலர் கடிதம்!!

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

தற்போது மத்திய அரசிடம் கொடுத்துள்ள விண்ணப்பத்தை மீண்டுமாக திரும்ப பெற்றுள்ளது ஃபைசர் நிறுவனம். இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம், ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசி தொடர்பாக கேட்ட விவரங்களுக்கு போதுமான தகவல்கள் திரட்டவில்லை என்பதால் தனது விண்ணப்பத்தை திரும்ப பெற்றுள்ளதாக அந்நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரத் பயோடெக்கின் கோவாக்சின் மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட்டின் கோவிஷீல்டு ஆகிய தடுப்பு மருந்துகளுக்கு முன்னதாகவே ஃபைசர் நிறுவனம் தனது தடுப்பூசியை பயன்படுத்த கூறி விண்ணப்பம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here