‘என் தாயின் தூக்கு தண்டனையை ரத்து செய்யுங்கள் ஜனாதிபதி அங்கிள்’ – ஷப்னத்தின் மகனின் உருக்கமான கடிதம்!!

0

காதலுக்காக தனது முழுக்குடும்பத்தையும் கொலை செய்து, தூக்கு தண்டனை பெற்றிருக்கும் ஷப்னத்தின் 12 வயது மகன், தனது தாயின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி ஜனாதிபதிக்கு உருக்கமான கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

குற்றவாளி மகனின் கோரிக்கை

கடந்த 2008ம் ஆண்டு உத்திர பிரதேசம் மாநிலம் மதுராவைச் சேர்ந்த ஷப்னம் அலி என்ற பெண், தனது காதலனை கரம் பிடிக்க தனக்கு எதிராக இருந்த மொத்த குடும்பத்தையும் கொலை செய்துள்ளார். இரட்டை முதுகலை பட்டப்படிப்பை பெற்ற ஷப்னம், 6ம் வகுப்பு கூட முடிக்காத சலீம் என்பவரைக் காதலித்து வந்தார். அவரது காதலுக்கு குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்ததால், தாய், தந்தை, சகோதரர், அவரது மனைவி, உறவுக்கார வாலிபர், 10 மாதக்குழந்தை ஆகியோரை பாலில் விஷம் கொடுத்து கொலை செய்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த கொலை வழக்கில் ஷப்னம் மற்றும் அவரது காதலர் சலீமுக்கும் தூக்குத்தண்டனை விதித்து 2010ம் ஆண்டு அம்ரோகா நீதிமன்றம் உத்தரவிட்டது. தூக்குத்தண்டனையை ரத்து செய்யக்கோரி ஷப்னம் சார்பில் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் என அனைத்து இடங்களிலும் வழக்கு தொடரப்பட்டது. தொடர்ந்து தோல்வியைச் சந்தித்த வழக்கின் இறுதியாக இருவருக்கும் மரணதண்டனை வழங்க மதுரா சிறை நிர்வாகம் தயாராகி வருகிறது.

நடிகை சித்ராவின் ‘கால்ஸ்’ படத்தின் காமன் டிபி – புகைப்படத்தை ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்!!

இந்நிலையில் தாய் ஷப்னமின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி அவரது 12 வயது மகன் முகமது தாஜ் ஜனாதிபதிக்கு கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய முகமது தாஜ் கூறும் போது, ‘நான் எனது தாயை நேசிக்கிறேன். ஜனாதிபதி அங்கிளிடம் எனக்கு கோரிக்கை ஒன்று உள்ளது. அவர் எனது தாயை தூக்கிலிடமாட்டார் என நம்புகிறேன்’ என கூறினார்.

தொடர்ந்து ஜனாதிபதிக்கு அவர் எழுதிய உருக்கமான கோரிக்கையுடன் உள்ள ஒரு கையேட்டைப் பிடித்து ‘என் தாயை ஜனாதிபதி மன்னிப்பார் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது’ என கூறியுள்ளார் அந்த 12 வயது சிறுவன் முகமது தாஜ். சிறுவன் தாஜின் வளர்ப்பு பெற்றோர் உஸ்மான் சைஃபி கூறும்போது, ‘சிறுவன் ஷப்னமை சந்திக்கும் போதெல்லாம் அவரது படிப்பு குறித்து அவர் விசாரிப்பார். தாஜை நன்றாக வளர்க்க வேண்டும், நன்றாக படிக்க வைக்க வேண்டும் என முயற்சி எடுத்து வருகிறோம். தாய் எந்த குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டாலும், குழந்தை குற்றவாளி அல்ல’ என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here