நடிகை சித்ராவின் ‘கால்ஸ்’ படத்தின் காமன் டிபி – புகைப்படத்தை ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்!!

0

மறைந்த நடிகை சித்ரா கடைசியாக நடித்துள்ள திரைப்படம் ‘கால்ஸ்’. இந்த திரைப்படம் அடுத்த வாரம் வெளியாகவுள்ள நிலையில் அவரது ரசிகர்கள் காமன் டிபி ஒன்றை தயாரித்துள்ளனர்.

‘கால்ஸ்’ படத்தின் காமன் டிபி

மறைந்த சின்னத்திரை சித்ரா கடைசியாக நடித்துள்ள படம் ‘கால்ஸ்’. ஆக்சன் மற்றும் த்ரில்லர் வகையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் ட்ரைலர் இணையதளத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. நிகழ்காலத்திலிருந்து, நேரமானது பின்னோக்கிச் செல்லும் வகையில் அமைந்திருந்த இத்திரைப்படத்தின் ட்ரைலர் லட்சக்கணக்கில் பார்வையாளர்களை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

‘அந்த நாள் மட்டும் என் வாழ்க்கையில் வரமால் இருந்திருந்தால்’ என ஒலிக்கும் குரலில் வெளியாகும் சித்ராவின் கதாப்பாத்திரம், அவரது உண்மையான வாழ்க்கையை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

கரூரில் நடந்த போராட்டம் – எம்.பி ஜோதிமணி உட்பட 100க்கும் மேற்பட்டவர்கள் அதிரடி கைது!!

சித்ரா நடித்துள்ள கால்ஸ் திரைப்படம் வரும் பிப்ரவரி 26ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் அவரது ரசிகர்கள் ‘கால்ஸ்’ திரைப்படத்திற்காக ஒரு காமன் டிபியை தயாரித்துள்ளனர். பொதுவாக விஜய், அஜீத் உள்ளிட்ட பெரிய நடிகர்களின் திரைப்படம் வெளியாகும் போது தான், அவர்களது ரசிகர்கள் காமன் டிபி ஒன்றை இணையதளத்தில் பதிவு செய்து மாஸ் காட்டி வருவார்கள்.

இந்த வகையில் முதன் முறையாக ஒரு நடிகைக்கு அவரது படத்திற்கான காமன் டிபியை அறிமுகப்படுத்த உள்ளனர் சித்ராவின் ரசிகர்கள். இந்த காமன் டிபியை சித்ராவின் திரையுலக தோழிகளான ரச்சிதா, ஜனனி, சரண்யா, நக்ஷத்ரா ஆகியோர் இன்று மாலை 6 மணிக்கு இந்த ரிலீஸ் செய்ய உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here